Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே டீமில் இத்தனை ஆல்ரவுண்டரா!!.. சிறந்த ஐபிஎல் அணி எது”.. வியப்பில் ஆடிப்போன ஆகாஷ் சோப்ரா!

மும்பை: ஐபிஎல் மெகா ஏலத்தை சிறப்பாக பயன்படுத்தி தரமான அணியை யார் உருவாக்கியுள்ளார் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

2022ம் ஆண்டிற்கான மெகா ஏலம் சமீபத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்து முடிந்தது.

இதில் சில அணிகள் தொடக்கத்தில் இருந்தே பணத்தை வாரி வழங்கிய நிலையில் சிஎஸ்கே, மும்பை அணிகள் கடைசியில் தான் முழு அளவில் பணத்தை வெளியிட்டது.

ஐபிஎல் மெகா ஏலம்

ஐபிஎல் மெகா ஏலம்

எனினும் இறுதியில் அனைத்து அணிகளும் அனுபவம் மற்றும் இளம் வீரர்கள் என ஒரு கலவையான அணிகளை உருவாக்கிக்கொண்டனர். இந்த முறை மொத்தமாக 204 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். இதில் 67 அயல்நாட்டு வீரர்கள் ஆகும். மொத்தமாக ரூ. 551.70 கோடிக்கு ஏலம் போயுள்ளது.

சோப்ராவின் விளக்கம்

சோப்ராவின் விளக்கம்

இந்நிலையில் இதில் எந்த அணி சரியான அளவில் பணத்தை செலவிட்டு சிறந்த அணியை உருவாக்கியது என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். அதில், என்னைப்பொறுத்தவரையில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி தான் சிறப்பாக செயல்பட்டது எனக்கூறுவேன். அவர்களிடம் இருந்த அனைத்து தொகையையும் முழுமையாக செலவழித்துள்ளனர். ஒரு ரூபாய் கூட மீதம் இல்லை. அதில் இருந்து 21 சிறந்த வீரர்களை வாங்கியுள்ளனர்.

எந்த அணியிடமும் அது இல்லை

எந்த அணியிடமும் அது இல்லை

அவர்களிடம் கே.எல். ராகுல்,மார்கஸ் ஸ்டோய்னிஸ், ரவி பிஷ்னாய் உள்ளனர். ஸ்டோய்னிஸ் போன்ற ஒருவர் இருக்கும் போது யாரேனும் ஜேசன் ஹோல்டரை எடுப்பார்களா?.. பொதுவாக அனைத்து அணிகளும் ஸ்டோய்னிஸ் அல்லது மிட்செல் மார்ஷ் அல்லது ஹோல்டர் மூவரில் யாரேனும் ஒருவரை எடுக்க வேண்டும் என குழப்பத்தில் இருப்பார்கள். ஆனால் அதில் இருந்து 2 வீரர்களை எடுத்து லக்னோ அசத்தியுள்ளது.

அசத்தல் டாப் ஆர்டர்

அசத்தல் டாப் ஆர்டர்

குயிண்டன் டிகாக்கை எடுத்துள்ளனர். 29 வயதாகும் அவர் ஓப்பனிங்கே அதிரடியாக கொடுக்கக்கூடியவர். மேலும் இடதுகை வீரர் ஆகும். அவரை ரூ.6.7 கோடிக்கு எடுத்தது அட்டகாசம். அவருக்கு பின்னர் பாத்தால் மணிஷ் பாண்டே, தீபக் ஹூடா, ராகுல் தேவட்டியா, ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா என அனைவருமே சிறப்பானவர்கள். குறிப்பாக தீபக் ஹூடா மற்றும் மணிஷ் பாண்டே ஆகியோரெல்லாம் சிறந்த தொகைக்கு கிடைத்துள்ளனர்.

 ஆல்ரவுண்டர்கள் படை

ஆல்ரவுண்டர்கள் படை

லோயர் ஆர்டரில் ஸ்டோய்னிஸ், க்ருணால் பாண்ட்யா, ஹோல்டர் மற்றும் கிருஷ்ணப்பா கௌதமை வைத்துள்ளனர். எந்த அணியும் இப்படி ஒரு ஆல்ரவுண்டர்கள் படையை வைத்திருக்கவில்லை. இந்த அணியில் பெரும்பாலானோர் அட்டகாசமான ஆல்ரவுண்டர்கள் இதனால் ப்ளேயிங் 11 குழப்பமே இருக்காது என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

Recommended Video

IPL 2022: Royal challengers Bangalore Has Kept 20 Crore For Shreyas Iyer' - Aakash Chopra
 வீரர்கள் பட்டியல்

வீரர்கள் பட்டியல்

கே.எல்.ராகுல், ரவி பிஷ்னாய், மார்கஸ் ஸ்டோய்னிஸ், குயிண்டன் டிகாக், மணிஷ் பாண்டே, ஜேசன் ஹோல்டர், தீபக் ஹூடா, க்ருணால் பாண்ட்யா, மார்க் வுட், ஆவேஷ் கான், அன்கிட் ராஜ்பூட், கிருஷ்ணப்பா கௌதம், துஷ்மந்தா சமீரா, சபாஷ் நதீம், மன்னன் வோரா, மோஷின் கான், ஆயுஷ் பதோனி, கெயில் மேயர்ஸ், கரண் ஷர்மா, எவின் லீவிஸ், மயங்க் யாதவ்

Story first published: Tuesday, February 15, 2022, 17:49 [IST]
Other articles published on Feb 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+