Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“படு மோசமான அட்டவணை”.. ஐபிஎல்-ல் சிரமப்படப்போகும் அணி எது? ஆகாஷ் சோப்ரா எச்சரிக்கை

மும்பை: ஐபிஎல் தொடருக்கான போட்டி முறைகளில் சில அணிகளுக்கு பெரும் பிரச்சினை இருப்பதாக ஆகாஷ் சோப்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Recommended Video

IPL 2022 format explained: 10 teams divided into two groups of five | Oneindia Tamil

நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான தேதிகள் மற்றும் போட்டி முறைகளை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது.

அதன்படி மொத்தமுள்ள 10 அணிகளும் 2 குரூப்களாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளை எதிர்கொள்ளவுள்ளன.

இரு குரூப்கள்

இரு குரூப்கள்

இதில் ஏ குரூப் "பி", சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத், , ஆர்சிபி, குஜராத் டைட்டான்ஸ், பஞ்சாப் அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் சிஎஸ்கே தான் பெரும் பலம் கொண்ட அணி. ஆனால் பி குரூப்பில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ அணி, கொல்கத்தா, டெல்லி கேப்பிடல்ஸ் உள்ளன. அதாவது 2வது குரூப்பில் தான் போர்க்களம் ஏற்படவுள்ளது.

சோப்ரா எச்சரிக்கை

சோப்ரா எச்சரிக்கை

இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசியுள்ளார். அதில், மும்பை அணியானது ராஜஸ்தான், டெல்லி, லக்னோ, கொல்கத்தாவுடன் தலா 2 முறை மோதவேண்டும். இதன் பிறகு சிஎஸ்கேவுடனும் 2 முறை மோத வேண்டும். இதில் அனைத்து அணிகளுமே பெரும் பலம் கொண்டவை இதனால் மும்பை அணி வருத்தத்தில் இருக்கும்.

குரூப் ஏவில் சிரமம்

குரூப் ஏவில் சிரமம்

இதுவே குரூப்பில் ‘ஏ' வில் எடுத்துக்கொண்டால், உதாரணத்திற்கு ஐதராபாத் அணி, பி குரூப்பில் உள்ள பலமான அணிகளுடன் ஒரே ஒரு முறை தான் மோதும். இதில் வெற்றி, தோல்வி என எது வந்தாலும் பெரிய பாதிப்பு ஏற்படுத்தாது. இதே நிலைமை தான் ஏ குரூப்பில் உள்ள அனைத்து அணிகளுக்குமே. பி குரூப் அணிகளுக்கு தான் கஷ்டம்.

ப்ளே ஆஃப் முறை

ப்ளே ஆஃப் முறை

எது எப்படி இருந்தாலும் ஒவ்வொரு குரூப்பில் உள்ள டாப் அணிகள் ப்ளே ஆஃப்-க்கு செல்லப்போவதில்லை. இங்கு அனைத்து அணிகளும் ஒன்றுடன் ஒன்று மோதுவதால் புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். உலகக்கோப்பையை விட இதுதான் சிறந்த முறை எனக்கூறுவேன் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, February 26, 2022, 14:56 [IST]
Other articles published on Feb 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+