Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கேவுக்கு கிடைத்த பொக்கிஷம்.. அசுர வேகத்தில் பவுலிங் வீசிய வீரர்.. இனி சஹார் குறித்த கவலை இல்லை!

மும்பை: சிஎஸ்கே அணியில் சஹாரை விட அசுர வேகத்தில் பவுலிங் வீசி பயிற்சியாளர்களை பிரமிக்கவைத்துள்ளார்.

நடப்பாண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 26ம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது.

முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

பயிற்சி முகாம்

பயிற்சி முகாம்

இதற்காக சிஎஸ்கே வீரர்கள் சூரத் நகரில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். எனினும் அந்த அணி இன்னும் ப்ளேயிங் 11- ஐ தேர்வு செய்வதில் சிக்கல் உருவாகியுள்ளது. முதல் பாதி ஆட்டங்களில் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹார் பங்கேற்க மாட்டார். ஷர்துல் தாக்கூரும் அணியில் இல்லை. இதனால் புதிய பவுலிங் படையை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது.

சிஎஸ்கே பவுலர்

சிஎஸ்கே பவுலர்

இந்நிலையில் அசுர வேகத்தில் பவுலிங் வீசி ஒருவர் அசத்தியுள்ளார். சஹாருக்கு மாற்றாக நியூசிலாந்து பவுலர் ஆடம் மில்னே எண்ணப்பட்டார். எனினும் இவர் முதல் சில நாட்களாக வேகம் குறைவாக பவுலிங் வீசியது தோனிக்கு கவலையளித்தது. ஆனால் சமீபத்தில் நடந்த பயிற்சி போட்டியில் தீடிரென வேகம் எடுத்துள்ளார். ஒவ்வொரு பந்தையும் 145 + கிமீ வேகத்தில் வீசி பயிற்சியாளர் பாலாஜியை பிரமிக்க வைத்துள்ளார்.

 துல்லியமான பவுலிங்

துல்லியமான பவுலிங்

மேலும் வலைப்பயிற்சிகளில் பவுன்சர் வீசுவது, யார்க்கர் வீசுவது, ஸ்லோ பால் போன்ற டெலிவரிகளை மிகவும் துல்லியமாக வீசி அசத்தியுள்ளார். இதனால், தீபக் சஹாருக்கு மாற்றாக நிச்சயம் ஆடம் மில்னே இருப்பார் என்பது உறுதியாகியுள்ளது. அவருடன் சேர்ந்து ஆடம் மில்னே, ஷிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் ஆகியோரை வைத்து ஒரு படையை உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ப்ளேயிங் 11 விவரம்

ப்ளேயிங் 11 விவரம்

ப்ளேயிங் 11 ஐ பொறுத்தவரையில் டெவோன் கான்வே, ருதுராஜ் கெயிக்வாட், ராபின் உத்தப்பா, மொயீன் அலி, அம்பத்தி ராயுடு, ஜடேஜா, தோனி, பிராவோ, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ஆடம் மில்னே, ஷிவம் தூபே என மிகவும் சமநிலையான அணி உருவாகவிருக்கிறது.

Story first published: Monday, March 21, 2022, 19:56 [IST]
Other articles published on Mar 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+