சிஎஸ்கே வுக்கு காத்திருக்கும் செம வாய்ப்பு.. ஆடுகளம் கொடுக்க உள்ள ஆச்சரியம்.. தலைகீழ் மாறும் காட்சி
மும்பை: ஐபிஎல் சீசன் 15வது நாள் தொடங்கி 12 நாட்கள் ஆகிறது. நட்சத்திர அணிகளான மும்பை, சென்னை ஹாட்ரிக் தோல்விகளை தழுவியது.
பனிப் பொழிவு காரணமாக இரண்டாவது பந்துவீசும் அணிக்கு சிக்கல் ஏற்பட்டு தோல்வியை தழுவுகிறது. இதுவும் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
ஆனால், இது வெறும் ஆரம்பம் தான். இன்னும் எத்தனையோ நாட்கள் எஞ்சியுள்ளது. அதற்குள் காட்சிகள் மாறும், சிஎஸ்கேவின் நிலையும் தலைகீழ் மாறும்.

ஆடுகளம் தொய்வு
எந்த ஆடுகளங்களால் சிஎஸ்கே அணிக்கு பிரச்சினை இருக்கிறதோ. அதுவே சிஎஸ்கேவுக்கு சாதகமாக மாறும் சூழல் ஏற்படும். ஆம், 2 மாதம் 70 போட்டிகள் வெறும் 4 மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போது தான் 15 போட்டிகளே முடிவடைந்துள்ளது. அதற்குள் ஆடுகளம் தொய்வு அடைய தொடங்கிவிட்டது.

பனிப் பொழிவு
ஆம், அனைத்து போட்டிகளும் தொடர்ந்து ஒரே ஆடுகளத்தில் நடப்பதால் மைதானத்தின் தன்மை மாற தொடங்கும். அப்போது டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாகும். ஏப்ரல், மே கடைசியில் பனியின் தாக்கமும் குறைந்துவிடும். இதனால் இரண்டாவதாக பந்துவீசினால் எவ்வித சிக்கலும் இருக்காது.

சுழற்பந்துவீச்சு
மேலும், ஆடுகளம் தொய்வடைந்தாலே சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்பட தொடங்கும். அப்போது எந்த அணியிடம் பலமான சுழற்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்களோ, அவர்களே வெற்றி பெறுவார்கள். சென்னை அணியிடம் ஜடேஜா, மொயின் அலி, மிட்செல் சாட்னர், மற்றும் பிரசாந்த் சோலங்கி ஆகியோர் உள்ளனர்.

சிஎஸ்கே பிளான்
இதனால் இனி வரும் ஆட்டங்களில் சிஎஸ்கே அணி 3 சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடும். ஒரு இந்திய வேகப்பந்துவீச்சாளர், லெக் ஸ்ப்பினரான பிரசாந்த் சோலங்கியை வைத்து இனி சிஎஸ்கே காய் நகர்த்தலாம். சேப்பாக்கம் ஆடுகளம் போல் மும்பை ஆடுகளம் செயல்பட தொடங்கினால், சிஎஸ்கே அணி தொடர் வெற்றியை பெற்று பிளே ஆப்க்கு முன்னேற முடியும்.


Click it and Unblock the Notifications