Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆர்சிபியின் கேப்டனாக மீண்டும் விராட் கோலி.. சீனியர் கூறிய சூசக தகவல்.. அப்போ இதுதான் பிரச்சினையா?

மும்பை: ஆர்சிபி அணியின் கேப்டனாக விராட் கோலியே மீண்டும் வருவது குறித்து முன்னாள் வீரர் அஜித் அகர்க்கர் பேசியுள்ளார்.

ஐபிஎல் மெகா ஏலம் தொடங்குவதற்கு இன்னும் சில 4 நாட்களே உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மெகா ஏலத்தில் இந்த முறை ஆர்சிபி அணி தான் மிகப்பெரிய யோசனைகளுடன் வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

பணச்சிக்கல்

பணச்சிக்கல்

ஏனென்றால் அந்த அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகிவிட்டார். இதனால் புதிய கேப்டனை ஏலத்தில் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தற்போதைக்கு ஸ்ரேயாஸ் ஐயர், டேவிட் வார்னர், ஜேசன் ஹோல்டர் ஆகியோரே கேப்டன் பதவிக்கு சரியாக உள்ளனர். ஆனால் மூவரையும் வாங்க அனைத்து அணிகளும் போட்டிப்போட்டு வருகிறது. ஏற்கனவே கோலி, மேக்ஸ்வெல் மீது அதிக தொகை செலவு செய்துள்ள அந்த அணி, மீண்டும் கேப்டனுக்காக ரூ.16 கோடி வரை செலவு செய்ய தயக்கம் காட்டும்.

 மீண்டும் கோலி

மீண்டும் கோலி

இந்நிலையில் இது குறித்து தான் அஜித் அகர்க்கர் பேசியுள்ளார். அதில், விராட் கோலி மீண்டும் கேப்டன்சி எடுத்துக்கொண்டாலும், அதனை அவர் முழு புத்துணர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் செய்ய முன்வந்தால், ஆர்சிபியின் அனைத்து பிரச்சினையும் சுலபமாக தீரும். இல்லையென்றால் பெரும் சவால் காத்துள்ளது.

ஆர்சிபியில் உள்ள பிரச்சினை

ஆர்சிபியில் உள்ள பிரச்சினை

ஆர்சிபி இத்தனை வருடங்களாக பெரியளவில் பணத்தை செலவழிக்க தயங்குகிறது. இதுவே அந்த அணியின் தோல்விக்கு காரணமாகிறது. அதாவது டாப் 3 வீரர்களுக்கு மட்டுமே நன்கு செலவழித்துவிட்டு, மிடில் ஆர்டரில் அனுபவ வீரர்களை வாங்க தவறுகின்றனர். நல்ல வீரர்களுக்காக பணம் செலவழிக்காவிட்டால், மீண்டும் மீண்டும் அதே தவறு தான் நடக்கும். ஏதேனும் ஒரு வீரரை வைத்து போட்டியை வெல்லலாம், ஆனால் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாது எனக் கூறியுள்ளார்.

உண்மை நிலவரம் என்ன

உண்மை நிலவரம் என்ன

அகர்க்கர் கூறியதை போல ஆர்சிபியில் டிவில்லியர்ஸ், கோலி, மேக்ஸ்வெ என டாப் ஆர்டர் மட்டுமே சிறப்பாக உள்ளது தவிர்த்து, மிடில் ஆர்டரில் அனுபவமே இல்லாத வீரர்கள் வந்து சொதப்பி விடுகின்றனர். இதே போல பவுலிங்கிலும் ஃபார்மில் இருக்கும் வீரர்களை எடுப்பது கிடையாது. இதனால் 190 இலக்கு வைத்தாலும், ரன்களை வாரி வழங்கிவிடுகின்றனர். எனவே கோலியை மீண்டும் கேப்டனாக்கி, நல்ல வீரர்களை ஏலம் எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, February 7, 2022, 22:16 [IST]
Other articles published on Feb 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+