Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“ஜடேஜா நம்பிக்கை உடைந்துவிடும்”.. தோனி இருந்து சிஎஸ்கேவில் நடந்த தவறு.. முன்னாள் வீரர் எச்சரிக்கை!!

மும்பை: ஐபிஎல் தொடரில் தோனி செய்வது தவறு என இந்திய முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Recommended Video

CSK vs LSG போட்டியில் தோல்விக்கு காரணம் இதுதான் - Jadeja விளக்கம்

இந்தாண்டு ஐபிஎல் தொடரின் தொடக்கத்திலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திணறி வருகிறது.

தோனி கேப்டனிசியில் இருந்து விலகியது, தாமதமான மொயீன் அலியின் வருகை, தீபக் சஹார் இல்லாதது என அடுத்தடுத்து பின்னடைவுகளாகவே உள்ளது.

சிஎஸ்கே தோல்வி

சிஎஸ்கே தோல்வி

கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் போட்டியில் பேட்டிங்கில் தடுமாற்றம் இருந்ததால் 131 ரன்களை மட்டுமே எடுத்தது. நேற்று நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 210 ரன்களை அடித்தும் அதனை டிஃபண்ட் செய்ய முடியவில்லை. இதனால் மீண்டும் தோனியே கேப்டன் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ரசிகர்கள் கோரி வருகின்றனர்.

 அஜய் ஜடேஜா குற்றச்சாட்டு

அஜய் ஜடேஜா குற்றச்சாட்டு

இந்நிலையில் ஜடேஜாவை சுதந்திரமாக தோனி செயல்பட விடவில்லை என முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தோனிக்கு என்னை விட பெரிய ரசிகன் இருக்க முடியாது. ஆனால் பதவியில் இருந்து விலகிய பின்பு அவர் கேப்டன்சியில் அதிகாரம் செலுத்துவது சரியில்லை. நேற்றைய போட்டியில் தோனி தான் முடிவுகளை எடுத்தார். ஜடேஜாவை காணவில்லை.

நம்பிக்கையை சிதைக்கும்

நம்பிக்கையை சிதைக்கும்

இதுவே இந்த போட்டி ஒரு கடைசி லீக் போட்டியாக இருந்திருந்தால், நெருக்கடியான சூழலுக்காக தோனி கையாண்டார் எனக்கூறலாம். ஆனால் 2வது போட்டியிலேயே இப்படி செய்தால், அது ஜடேஜாவின் நம்பிக்கையை சிதைக்கும். தோனியின் முடிவுகளை நான் குறைக்கூறவில்லை. ஆனால் அவர் முடிவு எடுப்பது ஜடேஜாவை வளர்த்துவிடாது எனக்கூறினார்.

வல்லுநர்கள் கூறியது

வல்லுநர்கள் கூறியது

இதே போன்ற விமர்சனங்களை ரசிகர்களும் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் ஜடேஜாவுக்கு இது கேப்டன்சியின் ஆரம்பக்கட்டம் என்பதால் தான் தோனி பின் நின்று அனைத்து வேலைகளையும் செய்தார். அவர் முழுவதுமாக தயாராகி இருந்தால் தோனி தலையிட்டிருக்க மாட்டார் என்றும் வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

Story first published: Friday, April 1, 2022, 15:56 [IST]
Other articles published on Apr 1, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+