Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மெகா ஏலம்: “ரூ.20 கோடி உறுதி” ஒரே ஒரு வெஸ்ட் இண்டீஸ் வீரர் மீது அனைத்து அணிகளும் குறி.. காரணம் என்ன?

மும்பை: ஐபிஎல் மெகா ஏலத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஒருவருக்கு திடீரென ஏகபோகத்திற்கு மவுசு எகிறியுள்ளது.

Recommended Video

IPL 2022: Jason Holder Continues SUPER SHOW Ahead Of Mega Auction | Oneindia Tamil

ஐபிஎல் 2022 மெகா ஏலம் இன்னும் 2 வாரங்களில் ( பிப்.12, 13) நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் அனைத்து அணிகளும் தீவிரமாக களமிறங்கியுள்ளன.

இந்த முறை எந்த வீரருக்காக அனைத்து அணிகளும் அதிக தொகையை செலவிடப்போகின்றன என்ற கணிப்புகள் வெளியாகி வருகின்றன.

ஆல்ரவுண்டர்கள் தேவை

ஆல்ரவுண்டர்கள் தேவை

அந்தவகையில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான், ககிஸ்கோ ரபாடா, இஷான் கிஷான் என சில வீரர்களுக்காக அனைத்து அணிகளும் போட்டி போட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த பட்டியலில் திடீரென வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டர் டாப் இடத்திற்கு சென்றுள்ளார்.

என்ன காரணம்

என்ன காரணம்

ஐபிஎல் தொடரில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களுக்கு சமீப காலங்களாக அதிக டிமேண்ட் இருந்து வருகிறது. ஆனால் இந்த முறை அதனை அதிகரிக்கும் வகையில் இங்கிலாந்தை சேர்ந்த முன்னணி வீரர்களான பென் ஸ்டோக்ஸ், சாம் கரண் ஆகியோர் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்க போவதில்லை என அறிவித்துவிட்டனர். கடந்தாண்டு அதிக தொகைக்கு ஏலம் போன தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் ஓய்வு அறிவித்துவிட்டார்.

4 பந்துகளில் 4 விக்கெட்

4 பந்துகளில் 4 விக்கெட்

இப்படி பல வீரர்கள் விலக, வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டர் தனது பக்கம் அனைவரின் கவனத்தை திருப்பியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 4 பந்துகளில் 4 விக்கெட்களை கைப்பற்றி ஆச்சரியம் கொடுத்தார். இதனால் 3 - 2 என அந்த அணி தொடரைக் கைப்பற்றி அசத்தியது. இதே போல பேட்டிங்கிலும் அதிரடி மன்னனாக இருந்து வருகிறார். எனவே இவர் தான் 2022 ஐபிஎல்-ல் முக்கிய வீரராக இருப்பார் என கருதி அனைத்து அணிகளும் பணத்தை வாரி வழங்க முடிவெடுத்துள்ளது.

ஆர்சிபிக்கு லக்

ஆர்சிபிக்கு லக்

குறிப்பாக ஆர்சிபி அணிக்கு ஜேசன் ஹோல்டர் முக்கியமாக தேவைப்படுகிறார். அந்த அணிக்கு தற்போது ஒரு சீனியர் கேப்டன் தேவை. அந்தவகையில் ஹோல்டருக்கு கரிபியன் லீக் தொடரில் அதிக கேப்டன்சி அனுபவம் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் கேப்டனாக இருந்துள்ளார். எனவே அவரை கேப்டனாகவும், ஒரு சிறந்த ஆல்ரவுண்டராகவும் அணிக்குள் வளைத்துப்போட ஆர்சிபி திட்டமிட்டு வருகிறது.

Story first published: Monday, January 31, 2022, 11:41 [IST]
Other articles published on Jan 31, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+