“எல்லாம் ஓரளவுக்கு தான்..” பிசிசிஐ-ன் சுயநலமான செயல்.. நஷ்டத்தால் போர்க்கொடி தூக்கிய ஐபிஎல் அணிகள்!
மும்பை: பிசிசிஐ செய்யும் தவறான செயலுக்கு எதிராக அனைத்து ஐபிஎல் அணிகளும் போர்க்கொடி தூக்கியுள்ளன. விரைவில் அவசர ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
Recommended Video
நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச்26ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டி மே 29ம் தேதி நடைபெறுகிறது.
இதற்கான அட்டவணையை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்ட நிலையில், அனைத்து அணிகளும் பயிற்சி முகாமுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

பயிற்சி முகாம்
குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சூரத்தில் பயிற்சியை தொடங்கிவிட்டது. மற்ற அணிகளும் விரைவில் தொடங்கவிருக்கிறது. ஆனால் அதில் அணியின் முன்னணி வீரர்கள் இருக்க மாட்டார்கள். அதாவது எந்தவித சர்வதேச போட்டியிலும் விளையாடாமல் உள்ள 25 முன்னணி வீரர்கள் தற்போது பெங்களூருவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் அகாடமியில் முகாமிட்டுள்ளனர்.

பிரச்சினை என்ன
அவர்கள் ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார் உள்ளிட்ட ஸ்டார் வீரர்கள் ஆகும். இவர்கள் இல்லாததால் ஸ்பான்சர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. அதாவது ஒவ்வொரு அணியின் ஸ்பான்சர்களும், அணியின் வீரர்களை வைத்து விளம்பரம் எடுத்துக் கொள்வார்கள். இது பெரும்பாலும் ஐபிஎல் தொடங்குவதற்கு முன்னதாகவே நடைபெறும்.

இனியும் பொறுக்க முடியாது
ஆனால் தற்போது அதிக மதிப்புடைய வீரர்கள் பெங்களூருவில் உள்ளனர். அவர்கள் மார்ச் 19ம் தேதி தான் அணிக்குள் இணைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2 சீசன்களாக ஐபிஎல் தொடர் அயல்நாடுகளில் நடந்த போது ஸ்பான்சர்கள், இழப்பை பொறுத்துக் கொண்டனர். ஆனால் இந்த முறை இந்தியாவில் நடக்கும் போதும், பிசிசிஐ இப்படி செய்தால், எப்படி ஸ்பான்சர்கள் பலனடைவார்கள் என அணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.

விரைவில் ஆலோசனை
இதுகுறித்த அதிகாரப்பூர்வ கடிதங்களையும் ஐபிஎல் சேர்மேன் பிரிஜேஸ் பட்டேலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் இதுகுறித்து அனைத்து அணிகளும் ஒன்றிணைந்து ஆலோசனை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. டி20 உலகக்கோப்பைக்கு தயார் செய்வதற்காகவே வீரர்கள் பெங்களூரு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications