Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னா பாசம்பா.. அரைசதத்திற்கு பிறகு விராட் கோலி - அனுஷ்கா சர்மா செய்த விஷயம்.. ரசிகர்கள் நெகிழ்ச்சி!

மும்பை: விராட் கோலி கம்பேக் கொடுத்தவுடன் மனைவி அனுஷ்கா சர்மாவுடன் சேர்ந்து கொண்டாடிய விதம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

ஐபிஎல் தொடரின் 43வது லீக் போட்டியில் இன்று ஆர்சிபி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 170 ரன்களை குவித்தது.

கோலி கம்பேக்

கோலி கம்பேக்

இதில் ஆர்சிபி வெற்றி, தோல்வியை விட விராட் கோலி பேட்டிங் செய்த விதம் தான் ரசிகர்களுக்கு பெரும் சர்ஃப்ரைஸாக இருந்தது. தொடக்க வீரர் டூப்ளசிஸ் டக் அவுட்டாகிவிட்டார். இதன் பின்னர் பொறுப்புடன் ரன் குவிக்க வேண்டும். இதனால் கோலி தொடக்கம் முதலே அதிரடி காட்டி ரன் வேட்டை நடத்தினார்.

அசத்தல் சதம்

அசத்தல் சதம்

ஏதோ ஒரு போக்கில் ஆடாமல், ஒவ்வொரு ஷாட்டும் தனது பழைய ஸ்டைலை போல மிகவும் நம்பிக்கையுடன் செய்தார். இது அவரின் கம்பேக் என அனைவருக்கும் புரிந்தது. மொத்தமாக 53 பந்துகளை சந்தித்த கோலி, 58 ரன்களை விளாசினார். நடப்பு தொடரில் 2 டக் அவுட், 3 ஒற்றை இலக்க ஸ்கோர் என மோசமான ஃபார்மில் இருந்த அவர், அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்துள்ளார்.

விராட் கோலியின் செயல்

விராட் கோலியின் செயல்

இந்நிலையில் அரைசதம் அடித்த பிறகு கோலி என்ன செய்தார் என்பது தான் இணையத்தில் பரவி வருகிறது. பார்வையாளர்கள் இருக்கையில் அமர்ந்திருந்த அனுஷ்கா சர்மா, மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்று உணர்ச்சிப்பூர்வமாக கூச்சலிட்டு கொண்டாடினார். இதனை பார்த்த கோலி மனைவிக்கு களத்திலேயே நன்றி கூறினார்.

கடவுளிடமும் நன்றி

இதனைத் தொடர்ந்து பேட்டை வானத்தை நோக்கி உயர்த்தி கடவுளுக்கு நன்றி கூறினார். தென்னாப்பிரிக்காவுடனான தொடரில் கோலிக்கு ஓய்வு கொடுக்க ஆலோசனைகள் நடைபெற்று வந்தன. ஆனால் தற்போது தனக்கு எந்தவித ஓய்வும் தேவையில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்.

Story first published: Saturday, April 30, 2022, 18:08 [IST]
Other articles published on Apr 30, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+