தோனிக்கு சட்ட தலைவலியா??.. விளம்பரத்தால் வந்த சிக்கல்.. வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை!!
தோனி நடித்த ஐபிஎல் விளம்பரத்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
15வது சீசன் ஐபிஎல் போட்டிகள் கடந்த 2 வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

தோனியின் சிக்கல்
சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய, தோனி தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் சிஎஸ்கேவுக்காக எடுத்து வருகிறார். எனினும் அணியின் ப்ளேயிங் 11 சரிவர செட் ஆகாததால் தொடர்ந்து தோல்வி பெற்று வருகிறது. இதற்கு தோனி மீதும் அதிக விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

புது சிக்கல்
இந்நிலையில் புதிய சிக்கல் உருவாகியுள்ளது. அதாவது ஐபிஎல் தொடருக்காக தோனி விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார். அதில், தோன் பஸ் டிரைவர் போன்றும், சாலையில் திடீரென பேருந்தை நிறுத்திவிட்டு, ஐபிஎல் தொடரை பார்ப்பது போன்றும் காட்டப்பட்டது. இதனால் சாலை நெரிசல் ஏற்பட்ட போதும், மற்ற பொதுமக்களும் ஒன்று சேர்ந்து ஐபிஎல் போட்டியை காண்கிறார்கள் என்பது போன்று காட்டப்பட்டது.

வழக்குப்பதிவு
இதனை பார்த்த நுகர்வோர் சங்கம் சார்பில் (CUTS), மத்திய ஒளிபரப்பு துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில், சாலை விதிமீறல், சாலை நெரிசல் ஆகியவற்றை தோனியின் விளம்பரம் ஊக்குவிப்பது போன்று உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும் தோனியும் இதற்கு துணைப்போயுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

உடனடி நடவடிக்கை
இதனை விசாரித்த மத்திய ஒளிபரப்பு துறை, குற்றச்சாட்டு நிரூபனமானதால், சம்மந்தபட்ட விளம்பரத்தை மாற்றி அமைக்க வேண்டும். அல்லது, அனைத்து சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் இருந்தும் வரும் ஏப்ரல் 20ம் தேதிக்குள் நீக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதில் தோனி மீது நடவடிக்கை அல்லது அறிவுரைகள் எடுக்கப்பட்டதா என்ற தகவல் வெளியிடப்படவில்லை.


Click it and Unblock the Notifications