Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வின் கொடுத்த அதிர்ச்சி.. ஆடிப்போய் நின்ற தோனி.. ராஜஸ்தானிடம் சிஎஸ்கே தோற்றது எப்படி?

மும்பை: ராஜஸ்தான் அணிக்கு எதிரான் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வினால் சிஎஸ்கே அணி தோல்வியை சந்தித்தது.

ஐபிஎல் தொடரின் 68வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேடிங் செய்ய முடிவெடுத்தது.

 தவித்த சிஎஸ்கே

தவித்த சிஎஸ்கே

இதனையடுத்து களமிறங்கிய அந்த அணியில் ஓப்பனிங் வீரர்களே அதிர்ச்சி கொடுத்தனர். ருதுராஜ் கெயிக்வாட் 2 ரன்கள், டெவோன் கான்வே 16 ரன்கள் என அடுத்தடுத்து வெளியேறினர். இதன் பின்னர் வந்த மொயீன் அலி ஒருபுறம் அதிரடி காட்ட, மறுபுறத்தில் என். ஜகதீசன் 1, அம்பத்தி ராயுடு 3 என பார்ட்னர்ஷிப் கொடுக்காமல் ஏமாற்றினர்.

மொயீனின் அதிரடி

மொயீனின் அதிரடி

சிஎஸ்கே இனி அவ்வளவு தான் என்ற சூழல் இருந்த போது, மொயீன் அலி தனது கியரை மாற்றினார். ஒவ்வொரு பந்தையும் சிக்ஸருக்கு விரட்டினார். இதனால் 19 பந்துகளில் அவர் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். மறுமுணையில் தோனி அவருக்கு உறுதுணையாக நிதானமாக ஆடினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய மொயீன் அலி 57 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 93 ரன்களை விளாசினார்.

 கடினமான இலக்கு

கடினமான இலக்கு

கேப்டன் எம்.எஸ்.தோனி 28 பந்துகளில் 26 ரன்களை சேர்த்தார். இதனால் 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 150 ரன்களை சேர்த்தது. இந்த மைதானத்தில் 150 ரன்கள் என்பது சற்று கட்டுப்படுத்தக் கூடிய இலக்காக இருந்ததால் ரசிகர்கள் நிம்மதியாக இருந்தனர்.

ராஜஸ்தானின் சொதப்பல்

ராஜஸ்தானின் சொதப்பல்

151 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஷ்வால் மட்டும் 44 பந்துகளில் 59 ரன்களை விளாச, மற்ற வீரர்கள் சொதப்பினர். ஜாஸ் பட்லர் (2), கேப்டன் சஞ்சு சாம்சன் (15), தேவ்தத் பட்டிக்கல் (3), ஹெட்மெயர் (6) என அடுத்தடுத்து ஆட்டமிழந்து அணியை சரிவு பாதைக்கு கொண்டு சென்றனர்.

அஸ்வின் கொடுத்த ஷாக்

அஸ்வின் கொடுத்த ஷாக்

சென்னை அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியான போதுதான் அஸ்வின் வந்தார். சிஎஸ்கேவின் பவுலிங்கை பவுண்டரி, சிக்ஸர் என கிடாசினார். 23 பந்துகளை சந்தித்த அவர் 2 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 40 ரன்களை குவித்தார். அனைத்தையும் சரியாக செய்த தோனி, அஸ்வினை மட்டும் அசைக்க முடியாமல் திகைத்தார். இதனால் ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 151 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

Story first published: Friday, May 20, 2022, 23:29 [IST]
Other articles published on May 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+