Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“வார்னர், மேக்ஸ்வெல் உள்ளிட்டோர் இல்லை” ஐபிஎல் அணிகளுக்கு அதிர்ச்சி.. ஆஸி, வாரியம் திடீர் அறிவிப்பு

மும்பை: ஐபிஎல் 15வது சீசன் வரும் மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

IPL 2022 Auction: Sold and Unsold List of Australians

ஆனால், குறுக்கே இந்த கௌசிக் வந்தால் என்ற காமெடி போல், ஐபிஎல் தொடருக்கு தொந்தரவு தரும் விதமாக பாகிஸ்தான், ஆஸ்திரேலியா தொடர் வந்துள்ளது.

இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் எப்போது ஐபிஎல் தொடரில் பங்கேற்பார்கள் என்ற சந்தேகம் எழுந்தது.

ஆஸி. வீரர்கள்

ஆஸி. வீரர்கள்

வரும் மார்ச் மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள ஆஸ்திரேலிய அணி, 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடர் ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனால் அந்த தொடர் முடிந்தவுடன் ஆஸ்திரேலிய வீரர்கள் குவாரண்டைனில் இருக்க வேண்டும்.

பிசிசிஐ கோரிக்கை

பிசிசிஐ கோரிக்கை

இதனால், ஆஸ்திரேலிய வீரர்கள் , ஐபிஎல் தொடரில் முதல் சில போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் தங்கள் நாட்டு வீரர்களை ஐபிஎல் தொடருக்கு முன்னதாகவே அனுப்புமாறு பிசிசிஐ கோரிக்கை வைத்தது.

வீரர்களுக்கு ஓய்வு

வீரர்களுக்கு ஓய்வு

இதனை ஏற்று கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், நட்சத்திர ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஒருநாள் மற்றும் டி20 தொடரிலிருந்து விலக்கு அளித்துள்ளது. அதன் படி, டெல்லி அணிக்காக விளையாடும் டேவிட் வார்னர், கொல்கத்தா அணிக்காக விளையாடும் பாட் கம்மின்ஸ், பெங்களூரு அணிக்காக விளையாட உள்ள ஹேசல்வுட் ஆகியோர் விளையாட உள்ளனர்.

ஏப்ரல் 6

ஏப்ரல் 6

இந்த வீரர்கள் அனைவரும் ஏப்ரல் 6ஆம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வீரர்கள் குறைந்தபட்சம் 3 போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படலாம். இதனிடையே லக்னோ அணியின் ஸ்டோனிஸ், டெல்லி அணியின் மிட்செல் மார்ஷ் ஆகியோர் பாகிஸ்தான் தொடரில் முழுமையாக பங்கேற்பதால், இவர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க தாமதமாகலாம். மேக்ஸ்வெல் திருமணம் மற்றும் தேனிலவு காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Story first published: Tuesday, February 22, 2022, 15:41 [IST]
Other articles published on Feb 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+