“போட்றா வெடிய” ஐபிஎல்-க்கு வரும் இருபெரும் தலைகள்.. நீண்ட காத்திருப்புக்கு முடிவு..இனி கலக்கல் தான்
மும்பை: ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள், ஐபிஎல் தொடரில் தங்களது அணிகளுடன் இணைந்துள்ளனர்.
ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 26ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 6 லீக் போட்டிகள் நடந்து முடிந்துவிட்டன.
இதில் சிஎஸ்கே, ஆர்சிபி, மும்பை, போன்ற அணிகள் தோல்வியும், ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் போன்ற அணிகள் வெற்றியும் பெற்று சுவாரஸ்யப்படுத்தியுள்ளன.

ரசிகர்கள் ஏக்கம்
எனினும் இந்தாண்டு தொடக்கத்தில் அயல்நாட்டு வீரர்கள் பெரியளவில் கவனம் ஈர்க்கவில்லை. இதற்கு காரணம் முன்னணி வீரர்களான டேவிட் வார்னர், க்ளென் மேக்ஸ்வெல், ஜானி பேர்ஸ்டோ, மிட்செல் மார்ஷ் உள்ளிட்டோர் இன்னும் விளையாட வராமல் இருந்தது தான். இந்நிலையில் இன்று இரு வீரர்கள் தங்களது அணிகளுடன் இணைந்துள்ளனர்.

கோலிக்கு நிம்மதி
ஆர்சிபி வீரரான க்ளென் மேக்ஸ்வெல்லுக்கு கடந்த மார்ச் 18ம் தேதி கிறிஸ்துவ முறைப்படியும், மார்ச் 27ம் தேதி தமிழ் முறைப்படியும் திருமணம் நடைபெற்றது. இந்த சூழலில் திருமணமான 4 நாட்களில் ஐபிஎல் தொடரில் பங்கேற்க இந்தியா வந்துவிட்டார். இன்று ஆர்சிபி அணியில் இணைவார் என தகவல் வெளியாகியுள்ளது.

மற்றொரு தலை
இதே போல சர்வதேச போட்டியில் பங்கேற்றிருந்த இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். அவர் 3 நாட்கள் குவாரண்டைனுக்கு பிறகு ப்ளேயிங் 11ல் இடம்பெறுவார். இந்த பட்டியலில் டேவிட் வார்னர் எப்போது வருவார் என்பது மட்டும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
Recommended Video

வார்னருக்கு என்ன ஆனது
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ஒப்பந்தமாகியுள்ள, வார்னர் பாகிஸ்தானுடனான தொடர், ஷேன் வார்னேவின் இறுதி அஞ்சலி என கலந்துக் கொண்டு வருகிறார். இதனால் ஏப்ரல் முதல் வாரத்தில் இந்தியாவுக்கு வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி அணியில் தற்போதைக்கு வெறும் 2 அயல்நாட்டு வீரர்கள் தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications