ஐபிஎல் அணிகளுக்கு ஜன.31ம் தேதி வரை காலக்கெடு.. மெகா ஏலத்திற்காக பிசிசிஐ முக்கிய அறிவிப்பு.. விவரம்!
மும்பை: ஐபிஎல் அணிகளுக்கு முக்கிய காரணங்களுக்காக ஜனவரி 31ம் தேதி வரை கால அவகாசம் விதித்துள்ளது.
2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. இதற்கு காரணம் மெகா ஏலம் மற்றும் 2 புதிய அணிகள்.
பழைய அணிகள் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் விவரங்களை ஏற்கனவே வெளியிட்டுவிட்ட நிலையில் புதிய அணிகள் மட்டும் இன்னும் அறிவிக்கவில்லை.

ஐபிஎல் மெகா ஏலம்
புதிதாக வந்துள்ள லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் 2 உள்நாட்டு வீரர்கள் மற்றும் ஒரு அயல்நாட்டு வீரரை ஏலத்திற்கு முன்பாகவே ஒப்பந்தம் செய்துக்கொள்ளலாம். ஆனால் அதற்கு பிசிசிஐயே முட்டுக்கட்டை போட்டிருந்தது. சூதாட்ட புகாரில் சிக்கியிருந்த அகமதாபாத் அணி மீதான விசாரணை இன்னும் முடிவு பெறவில்லை. எனவே அதுவரை வீரர்களின் ஒப்பந்தங்களை நிறுத்திவைக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

காலக்கெடு விதிப்பு
இந்நிலையில் அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதாவது வரும் ஜனவரி 31ம் தேதிக்குள் புதிய அணிகள் ஒப்பந்தம் செய்துள்ள வீரர்களை அறிவிக்க வேண்டும் என காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இந்த காலக்கெடு 25ம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் 31ம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

புது குழப்பம்
இருப்பினும் அகமதாபாத் அணியின் விவகாரத்தில் மட்டும் இன்னும் முடிவு எட்டப்படவில்லை. இதனை விசாரிக்க அமைக்கப்பட்ட தனிக்குழு பச்சைக்கொடி காட்டிவிட்டது. என்னதான் பிரச்சினை முடிந்தாலும், அகமதாபாத் அணியை வாங்க சிவிசி கேப்பிடல்ஸ் நிறுவனம் - பிசிசிஐ இடையே புதிய ஒப்பந்தம் போட வேண்டும். அதற்காக தான் தற்போது மும்பைக்கு அந்நிறுவனம் விரைந்துள்ளது.
Recommended Video

தொடங்கிய பணிகள்
இந்த பிரச்சினைகள் முடிந்துவிட்டால், அகமதாபாத் அணியின் ஒப்பந்தங்கள் தொடங்கும். அந்த அணி ஏற்கனவே கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரை தேர்ந்தெடுத்துள்ளது. டேவிட் வார்னர் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோரும் அணிக்காக தேர்வாகியுள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.


Click it and Unblock the Notifications
