Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. ஐபிஎல் ப்ளே ஆஃப் குறித்து முக்கிய அப்டேட்.. பிசிசிஐ அறிவிப்பு!!

மும்பை: ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் சுற்றுகள் குறித்த முக்கிய அப்டேட்டை பிசிசிஐ அறிவித்துள்ளது.

15வது சீசனுக்கான ஐபிஎல் போட்டிகள் கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற சூழலில் லீக் சுற்றின் கடைசி பகுதியை எட்டியுள்ளது.

தற்போது வரை மும்பை இந்தியன்ஸ் அணி மட்டும் ப்ளே ஆஃப் ரேஸில் இருந்து வெளியேறிய சூழலில் மற்ற அணிகள் மோதி வருகின்றன.

ஐபிஎல் இறுதிகட்டம்

ஐபிஎல் இறுதிகட்டம்

புதிதாக வந்துள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி 9 போட்டிகளில் 8 வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துவிட்டது. ப்ளே ஆஃப்-க்கு செல்வதையும் உறுதிப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து மற்றொரு புதிய அணியான லக்னோ அணி 7 வெற்றிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி 6 வெற்றிகளுடன் 3வது இடத்திலும், ஐதராபாத் 4வது இடத்திலும் உள்ளன.

ப்ளே ஆஃப் சுற்றுகள்

ப்ளே ஆஃப் சுற்றுகள்

இவர்களுக்கு அடுத்தபடியாக தான் ஆர்சிபி, டெல்லி, கொல்கத்தா, பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ் என 5 அணிகளும் எப்படியாவது ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துவிட வேண்டும் என முனைப்பு காட்டி வருகின்றன. இந்நிலையில் ப்ளே ஆஃப் சுற்றுகள் எங்கு நடைபெறுகிறது, அதில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பிசிசிஐ அறிவித்துள்ளது.

பிசிசிஐ அறிவிப்பு

பிசிசிஐ அறிவிப்பு

அதாவது வரும் மே 24ம் தேதி முதல் குவாலிஃபையர் போட்டி மற்றும் மே 26ம் எலிமினேட்டர் போட்டி ஆகியவை கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மே 27ம் தேதியன்று குவாலிஃபையர் 2 போட்டி அகமதாபாத்தில் உள்ள மோதிரா மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இவையெல்லாம் முடிந்த பிறகு வரும் மே 29ம் தேதியன்று அகமதாபாத் மோதிரா மைதானத்திலேயே இறுதிப்போட்டியும் நடைபெறவிருக்கிறது.

Recommended Video

Prithvi Shawவின் Mumbai Apartment! Invest செய்த 5 Years Salary | OneIndia Tamil
பிசிசிஐ ரிஸ்க்

பிசிசிஐ ரிஸ்க்

இந்த ப்ளே ஆஃப் மற்றும் இறுதிப்போட்டிகள் அனைத்திலும் முழு அளவில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இரு மாநில முதல்வர்களுடனும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்தார். டெல்லி அணியில் கொரோனா பரவிய சூழலில் பிசிசிஐ ரிஸ்க் எடுப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, May 3, 2022, 20:59 [IST]
Other articles published on May 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+