Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி நேரத்தில் இப்படியா செய்வது?..ஐபிஎல் ப்ளே ஆஃப் சுற்றுக்கான புது விதிமுறைகள்..சிக்கலில் 4அணிகள்!

மும்பை: ஐபிஎல் ப்ளே ஆஃப் சுற்றுக்காக வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகளால் 4 அணிகளும் சிக்கித் தவிக்கின்றன.

ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. வரும் மே 24ம் தேதி முதல் 29 வரை ப்ளே ஆஃப் சுற்றுகள் நடைபெறுகிறது.

இதற்காக குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் தேர்வாகியுள்ளன.

ப்ளே ஆஃப் சுற்று

ப்ளே ஆஃப் சுற்று

வரும் மே 24ம் தேதி நடைபெறும் முதல் குவாலிஃபையர் போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஆனால் ப்ளே ஆஃப் போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல் உண்டாகியுள்ளது. போட்டி நடைபெறும் கொல்கத்தா நகரில் பலத்த மழை பெய்து வருகிறது. போட்டி நாளின் போதும் கடும் மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் நிலவுகிறது.

புது விதிமுறைகள்

புது விதிமுறைகள்

இந்நிலையில் தான் பிசிசிஐ புது விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதாவது குவாலிஃபையர் மற்றும் எலிமினேட்டர் போட்டிகளுக்கு ரிசர்வ் டே தரப்பட மாட்டாது. இறுதிப்போட்டிக்கு மட்டுமே ரிசர்வ் டேவாக மே 30ம் தேதி பயன்படுத்தப்படும். அதற்கும் பல்வேறு நிபந்தனைகள் உள்ளன.

நிபந்தனைகள்??

நிபந்தனைகள்??

ப்ளே ஆஃப் போட்டிகள் மழையினால் பாதிக்கப்பட்டால், 2 மணி நேரம் கூடுதலாக தரப்படும். அதாவது இரவு 9.40 மணிக்கு போட்டியை தொடங்கி முழு ஓவரையும் வீசிக்கொள்ளலாம். இதுவே இறுதிப்போட்டி என்றால் இரவு 10.10 மணிக்கு தொடங்கி முழு ஓவரையும் வீசலாம். 20 நிமிட இன்னிங்ஸ் பிரேக் மட்டும் 10 நிமிடமாக குறைக்கப்படும்.

அதிக பாதிப்பு இருந்தால்

அதிக பாதிப்பு இருந்தால்

மழை குறுக்கிட்டால், குறைந்தபட்சம் 5 ஓவர் வரையிலாவது ப்ளே ஆஃப் போட்டிகள் நடத்தப்படும். அதன்படி 11.56க்கு போட்டி தொடங்கி 12.50 க்கு போட்டி முடியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை இறுதிப்போட்டியும் 5 ஓவர்களாக குறைக்கப்பட்டால் நண்பகல் 12.26 மணிக்கு தான் போட்டி தொடங்கும்.

Recommended Video

IPL 2022 Playoffs போட்டிகள் இன்று தொடக்கம்.. மழையால் போட்டி பாதிக்கப்படுமா ? #Cricket
5 ஓவரின் இல்லையென்றால்

5 ஓவரின் இல்லையென்றால்

ஒருவேளை கொடுக்கப்பட்ட கூடுதல் நேரத்தையும் தாண்டி போட்டி பாதிக்கப்பட்டால் ஒரே ஒரு சூப்பர் ஓவரை வைத்து ப்ளே ஆஃப் போட்டிகளின் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். அதுவும் நடக்கவில்லை என்றால் லீக் சுற்றின் முடிவில் யார் முன்னனி இடத்தில் இருக்கிறாரோ, அவர்கள் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்கள். இறுதிப்போட்டி மட்டும் மறுநாளன்று ஒத்திவைக்கப்படலாம்.

Story first published: Monday, May 23, 2022, 17:40 [IST]
Other articles published on May 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+