Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் கேப்டன்களுக்கு பெரிய ஆப்பு.. கடைசி நேரத்தில் பிசிசிஐ வைத்த செக்..ரசிகர்களுக்கு விருந்து உறுதி

மும்பை: அனைத்து கேப்டன்களின் எண்ணத்திலும் ஆப்பு வைக்கும் வகையில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் மார்ச் 26ம் தேதியன்று தொடங்குகிறது. மெகா ஏலம், 10 அணிகள் என பல சுவாரஸ்ய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

கடந்த 2 சீசன்களாக ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகள் நடைபெற்ற நிலையில் இந்தாண்டு துணிச்சலாக இந்தியாவில் நடத்துகின்றனர்.

கடந்த சீசனின் சர்ச்சைகள்

கடந்த சீசனின் சர்ச்சைகள்

அமீரகத்தில் நடந்த ஐபிஎல் போட்டிகள் பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்டது. சார்ஜா, அபுதாபி, துபாய் என மூன்றே மைதானங்களில் ஒட்டுமொத்த ஆட்டமும் முடிந்தது. அங்குள்ள பிட்ச் குறித்தும், பனிப்பொழிவு குறித்தும் அனைவருக்கும் தெரிந்ததால், டாஸை வைத்தே யார் வெல்வார்கள் என சுலபமாக கணிக்கப்பட்டது. கேப்டன்களும், முன்கூட்டியே சரியாக கணித்துவைத்திருந்ததால், சுவாரஸ்யங்கள் இல்லாமல் இருந்தது.

பிசிசிஐ ஸ்பெஷல் ஏற்பாடு

பிசிசிஐ ஸ்பெஷல் ஏற்பாடு

இதே போல தான் இந்த சீசனிலும், 5 மைதானங்களில் மட்டுமே ஐபிஎல் போட்டிகள் நடக்கின்றன. 70 லீக் போட்டிகள் வெறும் 4 மைதானங்களில் நடக்கின்றன. ஆனால் இங்கு தான் பிசிசிஐ மாஸ்டர் ப்ளானை செய்துள்ளது. இந்த முறை எந்தவொரு கேப்டனாலும், பிட்ச்- ஐ கணிக்க முடியாது. மேலும் ரசிகர்களுக்கும் போட்டியின் முடிவு என்னவென சஸ்பென்ஸாகவே இருக்கும்.

என்ன காரணம்

என்ன காரணம்

அதாவது ஒவ்வொரு மைதானத்திலும், தலா 5 பிட்ச்-கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் போட்டிகளின் போது, சுழற்சி முறையில் இந்த பிட்ச்-கள் பயன்படுத்தப்படும். ஒவ்வொரு பிட்ச்-ம் ஒவ்வொரு குணத்தை கொண்டது போல வடிவமைக்கப்பட்டுள்ளதாக, மைதானங்களின் பொறுப்பாளர் நதீம் மெமோன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Virat Kohli To Play In Ranji Trophy After Shows Poor Performance | Oneindia Tamil
முதல் போட்டி எங்கு

முதல் போட்டி எங்கு

வரும் 26ம் தேதி நடைபெறும் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே 10 அணிகள், 2 குரூப்கள், புதிய விதிமுறைகள் என பிசிசிஐ சர்ஃபரைஸ் கொடுத்துள்ள சூழலில் இந்த பிட்ச்- அறிவிப்பு மேலும் சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளது.

Story first published: Tuesday, March 22, 2022, 17:44 [IST]
Other articles published on Mar 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+