Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“ஒரு பைசா அதிகமாகக்கூடாது” ஐபிஎல் வீரர்களின் ஊதியத்தொகை.. அணிகளுக்கு ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் போட்ட பிசிசிஐ

அமீரகம்: ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு வீரருக்கும் எவ்வளவு சம்பளத்தொகை கொடுக்க வேண்டும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் மெகா ஏலம் நடத்தப்படவுள்ளது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த ஏலத்தில் பல்வேறு வீரர்கள் வேறு அணிகளுக்கு மாறுவார்கள்.

2 புதிய அணிகளும் அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் பங்கு பெறவிருப்பதால் ஏலத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

 வீரர்கள் தக்கவைப்பு

வீரர்கள் தக்கவைப்பு

2 புதிய அணிகள் வருவதால் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என்பதில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே உள்ள 8 அணிகளும் தங்களது அணியில் இருக்கும் 4 வீரர்களை ஏலத்திற்கு விடாமல் தக்கவைத்துக்கொள்ளலாம். இதில் சில விதிமுறைகள் உள்ளன. அதாவது 3 இந்திய வீரர்கள் - ஒரு அயல்நாட்டவர் அல்லது 2 இந்தியர்கள் - 2 அயல்நாட்டவர் என்ற முறையில் தான் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.

 புதிய அணிகளுக்கு வசதி

புதிய அணிகளுக்கு வசதி

இதே போல புதிதாக வரும் இரண்டு அணிகளுக்கும் ஸ்பெஷல் வசதிகள் ஏற்படுத்திக் கொக்கப்பட்டுள்ளது. அதாவது அந்த இரண்டு அணிகளும் மெகா ஏலம் நடைபெறுவதற்கு முன்னதாகவே 3 வீரர்களை நேரடியாக ஒப்பந்தம் செய்துக்கொள்ளலாம். அதில் 2 இந்தியர்கள் - ஒரு அயல்நாட்டவர் அல்லது 3 இந்திய வீரர்கள் என்ற அடிப்படையில் ஒப்பந்தம் செய்துக்கொள்ளலாம் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ஊதியம்

ஊதியம்

இந்நிலையில் ஒவ்வொரு அணியும் தக்கவைக்கப்போகும் வீரர்களுக்கு எவ்வளவு ஊதியம் தரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மெகா ஏலத்திற்கு ஒவ்வொரு அணியும் தலா ரூ.85 - 90 கோடி வரை செலவு செய்யலாம். அதில் 4 வீரர்களை தக்கவைக்க விரும்பினால், அதற்கென மொத்தமாக ரூ.42 கோடிக்குள் செலவளிக்க வேண்டும். 3 வீரர்களை மட்டும் தக்கவைக்க விரும்பினால் ரூ.33 கோடி மட்டுமே செலவளிக்க வேண்டும். 2 வீரர்களை மட்டும் தக்கவைத்துக்கொண்டால் ரூ.24 கோடி செலவளிக்க வேண்டும். ஒரே ஒரு வீரரை தக்கவைக்க விரும்பினால் ரூ.14 கோடி செலவு செய்ய வேண்டும். ஒருவேளை ஏதேனும் ஒரு அணி, இந்தியாவுக்காக ஆடாத வீரரை தக்கவைக்க விரும்பினால் ரூ.4 கோடி மட்டுமே செலவளிக்க வேண்டும்.

 தனி நபர் விவரம்

தனி நபர் விவரம்

இதில் தக்கவைக்க போகும் ஒவ்வொரு வீரருக்கும் தனித்தனியாக எவ்வளவு ஊதியம் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 வீரர்களை தக்கவைத்தால்
முதல் வீரருக்கு ரூ.16 கோடி
2வது வீரருக்கு ரூ.12 கோடி
4வது வீரருக்கு ரூ.6 கோடி
3 வீரர்களை தக்கவைத்தால்
முதல் வீரருக்கு ரூ.15 கோடி
2வது வீரருக்கு ரூ.11 கோடி
3வது வீரருக்கு ரூ.7 கோடி
2 வீரர்களை தக்கவைத்தால்
முதல் வீரருக்கு ரூ.14 கோடி
2வது வீரருக்கு ரூ.10 கோடி
ஒரு வீரரை மட்டும் தக்கவைத்தால்
ரூ. 14 கோடி மட்டும்
Story first published: Saturday, October 30, 2021, 21:26 [IST]
Other articles published on Oct 30, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+