
உலகக்கோப்பை ஏற்பாடு
அதாவது வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இதற்காக டி20 போட்டிகளை குறிவைத்து போட்டிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி ஐபிஎல் முடிந்தவுடன்
தென்னாப்பிரிக்காவுடன் ஜூன் 9ம் தேதி முதல் 19ம் தேதி வரை 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

பயண அட்டவணைகள்
இதன் பின்னர் முழுமுழுக்க அயல்நாட்டு தொடர்கள் தான். அதாவது ஜூலை மாதம் தொடங்கி இந்திய அணிக்கு தொடர்ச்சியாக போட்டிகள் உள்ளன. அதன் விவரங்களை பார்க்கலாம்.
அயர்லாந்து சுற்றுப்பயணம் ( June 26 - 28 ) - 2 t20
இங்கிலாந்து சுற்றுப்பயணம் ( ஜுலை 1 - 17) - 3 t20, 3 ODI, 1 டெஸ்ட்
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் ( ஜூலை 22 - ஆகஸ்ட் 7) - 5 t20, 3 ODI
ஆசியக் கோப்பை தொடர் ( ஆகஸ்ட் 7 - செப்.11 )
தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் ( தேதி முடிவாகவில்லை ) - 4 T20
இப்படி தொடர்ச்சியாக போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், வீரர்களின் பணிச்சுமையை சரியாக கையாள வேண்டிய சிக்கல் உள்ளது.

கூடுதல் சுமை
இந்நிலையில் இந்திய அணிக்கு மேலும் ஒரு சுமையை பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது. அதாவது செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகளில் பங்கேற்கிறது. இத்துடன் இரு அணிகளுக்கும் டி20 உலகக்கோப்பைக்கான பயிற்சிகள் முடிவடைகின்றன.

சீனியர் வீரர்கள் அதிருப்தி
ஓய்வு என்பதே கொடுக்காமல் இப்படி அனைத்து முன்னணி அணிகளுடனும் பிசிசிஐ ஒப்பந்தம் போட்டுள்ளதால் சீனியர் வீரர்கள் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் உலகக்கோப்பை நடைபெறுவதால் அந்த அணியுடன் மோதினால் சரியாக இருக்கும் என பிசிசிஐ திட்டம் போட்டது. எனினும் எப்படி பணிச்சுமையை சரிசெய்வது என ரோகித் சர்மா குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

டி20 உலகக்கோப்பை தொடர்
இந்த தொடர்களுக்கு பின்னர் நேரடியாக ஆஸ்திரேலியாவில் நவம்பரில் தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்கும். இப்படி தொடர்ந்து அட்டவணைகள் உள்ளதால், வீரர்களுக்கு இடையிடையே ஓய்வுகள் தரப்படும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Click it and Unblock the Notifications