ஐபிஎல் தேதிகளில் மாற்றம்.. இரண்டே நாட்களில் முக்கிய சரவெடி போட்டிகள்.. பிசிசிஐ இறுதி முடிவு இதோ!
மும்பை: ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி மற்றும் இடங்கள் குறித்து பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்தன. ஒவ்வொரு அணியும் தங்களது ப்ளேயிங் 11ஐ கட்டமைத்து வருகின்றன.
இதனையடுத்து ஐபிஎல் போட்டிகள் எப்போது தொடங்கும், எந்தெந்த இடங்களில் நடைபெறும் என்ற குழப்பம் உலாவி வந்தது.

ஐபிஎல் தொடங்கும் தேதி
ஏனென்றால் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 27ம் தேதி முதல் தொடங்கி மே 5ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அதில் சில நிர்வாகிகளுக்கு உடன்பாடு இல்லை. இந்நிலையில் ஒரு நாள் முன்னதாக மார்ச் 26ம் தேதி ஐபிஎல் தொடரை தொடங்க பிசிசிஐ பச்சைக்கொடி காட்டியுள்ளது.

ஏன் இந்த மாற்றம்
இந்த ஒரே ஒரு நாள் மாற்றத்திற்குள் பெரிய காரணம் உண்டு. அதாவது மார்ச் 26ம் தேதி என்பது சனிக்கிழமை ஆகும். வார இறுதி நாட்களில் ஒன்றான அன்று முதல் போட்டியை வைத்தால் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அதே எதிர்பார்ப்புடன் ஞாயிற்றுக்கிழமை 2 போட்டிகளை ( டபுள் ஹெட்டர்ஸை) நடத்தி விடலாம். இதன் மூலம் 2 நாட்களில் 3 போட்டிகள் நடத்தி முடிக்கப்படும். ஆனால் மார்ச் 27ம் தேதி தொடங்கினால் ஒரே ஒரு போட்டி தான் நடத்த முடியும்.

நடைபெறும் நகரங்கள்
ஒட்டுமொத்த லீக் போட்டிகளையும் மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் மட்டும் நடத்தப்படவுள்ளது. இதற்காக மும்பையில் வான்கடே, ப்ராபேர்ன் ஸ்டேடியம், DY பாட்டில் ஸ்டேடியம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. புனேவில் எம்.சி.ஏ ஸ்டேடியம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. ரிலையன்ஸின் ஜியோ மைதானம் இணைக்கப்படவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

ப்ளே ஆஃப் சுற்று எங்கு
ஆனால் ப்ளே ஆஃப் போட்டிகளை நடத்தும் இடம் தான் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அகமதாபாத்தில் உல்ல மோதிரா மைதானம் தற்போதைக்கு முதன்மை தேர்வாக உள்ளது. இதனுடன் மும்பை வான்கடேவை இணைக்கலாமா? வேண்டாமா? என்பதில் தான் குழப்பமே இருந்து வருகிறது. எனினும் அடுத்த வாரத்தில் முழு அட்டவணையும் வெளியாகும்.


Click it and Unblock the Notifications