ஐபிஎல் 2022: புத்தாண்டையொட்டி பிசிசிஐ கொடுத்த மெகா பரிசு.. முக்கிய அப்டேட்கள் வெளியானது- முழு விவரம்
சென்னை: கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி ஐபிஎல் ரசிகர்களுக்கு பிசிசிஐ சர்ஃபரைஸ் கிஃப்ட்டுகளை வழங்கியுள்ளது.
Recommended Video
2022ம் ஆண்டு ஐபிஎல் தொடர் முதல் அகமதாபாத் மற்றும் லக்னோ என 2 புதிய அணிகளை பிசிசிஐ சேர்த்துள்ளது.
இதற்காக இந்தாண்டு மெகா ஏலம் நடத்தப்படவுள்ளது. ஒவ்வொரு அணியும், தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை கடந்த மாதம் வெளியிட்டது.

புதிய சர்ச்சை
புதிதாக வந்துள்ள 2 அணிகளும், ஏலத்தில் விடப்படும் வீரர்களில் யாரேனும் 3 வீரர்களை நேரடியாக ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். அதன்படி லக்னோ அணி கே.எல்.ராகுல், ரஷித் கான் என முக்கிய வீரர்களிடம் தனது பேச்சுவார்த்தைகளை முடித்துவிட்டது. ஆனால் அகமதாபாத் அணி மட்டும் எந்தவித முயற்சிகளும் எடுக்க முடியாத சூழலில் உள்ளது. இதற்கு காரணம் அந்த அணி மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தான்.

சட்டவிரோதம்
புதிய அணிகளுக்காக நடத்தப்பட்ட ஏலத்தில் அகமதாபாத் அணியை சிவிசி கேப்பிடல்ஸ் பார்ட்னர்ஸ் நிறுவனம் வென்றிருப்பதாக அறிவிக்கப்பட்டது. ரூ.5,625 கோடி கொடுத்து அந்த நிறுவனம் வாங்கியது. ஆனால் ஐபிஎல் போட்டிகளை வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் சில சட்ட விரோத நிறுவனங்களில் சிவிசி கேப்பிடல் பார்ட்னர்ஸ் நிறுவனம் முதலீடு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தனி குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரனை நடத்தப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த அணி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறக்கூடிய சூழல் கூட இருந்தது.

பிசிசிஐ அறிவிப்பு
இந்நிலையில் அனைத்து அணிகளுக்கும், ரசிகர்களுக்கும் பிசிசிஐ சார்பில் கிறிஸ்துமஸ் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அதாவது அகமதாபாத் அணியின் பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டதாகவும். அந்த அணி விளையாடுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என தெரிகிறது. இந்த அணிகள் 3 வீரர்களை ஒப்பந்தம் செய்து கொள்ளும் தேதி ஜனவரி 15ம் தேதி வரை கொடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அகமதாபாத் அணி தனது பணிகளை தொடங்கியுள்ளது.

மெகா ஏலம் அப்டேட்
இதே போல மெகா ஏலம் குறித்த அப்டேட்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஒத்திவைக்கப்பட்ட வீரர்களின் ஏலம் பிஃப்ரவரி மாதம் 12 மற்றும் 13ம் தேதிகளில் நடைபெறும் என்றும் இதற்காக பெங்களூரு நகரத்தில் உள்ள ஹோட்டலுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications