Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் பம்பர் ஆஃபர்.. ரசிகர்களுக்காக பிசிசிஐ மெகா விருந்து.. எதிர்நோக்கியுள்ள ரசிகர்கள்!!

மும்பை: ஐபிஎல் தொடரின் இந்த வாரம் ரசிகர்களுக்காக பம்பர் விருந்துகளை பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது.

15வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 26ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது வருகிறது.

2 வாரங்களின் முடிவில் ரசிகர்கள் எதிர்பார்க்காத பல திருப்பங்கள், அதிவேக அரைசதங்கள், தோல்விகள் என பல சுவாரஸ்யங்கள் அடங்கியிருந்தனர்.

என்னென்ன சுவாரஸ்யங்கள்

என்னென்ன சுவாரஸ்யங்கள்

இந்நிலையில் இந்த வாரத்தின் விடுமுறை நாட்களுக்காக மேலும் படு சுவாரஸ்யமான விஷயங்களை சேர்த்துள்ளது. நாளை ( சனிக்கிழமை ) மதியம் நடைபெறும் போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. சென்னை அணி தொடர்ந்து 3 போட்டிகளிலும், ஐதராபாத் அணி தொடர்ந்து 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளன. முதல் வெற்றியை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளுமே உள்ளன.

மும்பைக்கு சிக்கல்

மும்பைக்கு சிக்கல்

நாளை இரவு நடைபெறும் மற்றொரு போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. 5 முறை சாம்பியனான மும்பை அணி தனது முதல் 3 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது. ஆர்சிபி தற்போது வெற்றிகரமான அணியாக உருவெடுத்துள்ளது. இதனால் இந்த போட்டியும் ஒரு வாழ்வா? சாவா? போட்டியை போன்றே மாறியுள்ளது.

கவுரவ மோதல்

கவுரவ மோதல்

ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒரு கவுரவப்போட்டி நடைபெறுகிறது என்றே கூறலாம். ஏனென்றால் டெல்லி அணியில் ஒன்றாக இருந்த ஸ்ரேயாஸ் மற்றும் ரிஷப் பண்ட் மோதிக்கொள்ளவுள்ளனர். நடப்பு ஐபிஎல்-ல் டெல்லி மற்றும் கொல்கத்தா இரு அணிகளுமே சிறப்பான ஃபார்மில் உள்ளது. தொடர்ந்து வெற்றிகளும் பெற்று வருகிறது. எனவே இந்த போட்டியில் பெரும் போராட்டங்கள் இருக்கலாம்.

டாப் அணிகளின் மோதல்

டாப் அணிகளின் மோதல்

ஞாயிற்றுக்கிழமை மாலை மற்றொரு சுவாரஸ்யம் உள்ளது. அதாவது நடப்பு ஐபிஎல் தொடரில் டாப் இடங்களில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. ஒருபுறம் ஆயுஸ் பதோனி, ஆவேஷ் கான், தீபக் ஹூடா என இளம் வீரர்களுடன் லக்னோ அணி, மற்றொருபுறம் ட்ரெண்ட் போல்ட், பட்லர், ரவி அஸ்வின், யுவேந்திர சாஹல் என அனுபவ வீரர்களுடன் ராஜஸ்தான் அணி உள்ளது. இதனால் இந்த வார இறுதி மிகவும் அட்டகாசமான ஒன்றாக மாறியுள்ளது.

Story first published: Friday, April 8, 2022, 17:05 [IST]
Other articles published on Apr 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+