தீபக் சஹாரால் பலரின் வேலைக்கு ஆப்பு.. பிசிசிஐ அனுப்பிய அவசர நோட்டீஸ்.. NCA வில் பரபரப்பு!
மும்பை: தீபக் சஹாரால் பலருக்கும் வேலை பறிபோகும் அபாயம் உருவாகியுள்ளது. அதற்கான பணிகளில் பிசிசிஐ களமிறங்கியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் தீபக் சஹாரால், நடப்பு ஐபிஎல் தொடரில் கலந்துக்கொள்ள முடியாமல் போய்விட்டது.
வந்துவிடுவார் என தெரிவிக்கப்பட்ட சூழலிலும் கடைசி நேரத்தில் ஏமாற்றம் கொடுக்கப்பட்டுள்ளது.

தீபக் சஹார்
கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு காலில் தசைநார் கிழிவால் பாதிக்கப்பட்ட தீபக் சஹார் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வந்தார். அவர் உடல்நிலை சரியாகி பவுலிங் வீச தொடங்கியுள்ளார் என அறிவித்த சில நாட்களில் அதிர்ச்சி செய்தி ஒன்று வந்தது. அவருக்கு 2வதாக ஒரு காயம் முதுகுவலியில் உள்ளதென்று.

பிரச்சினை என்ன
தீபக் சஹாருக்கு முன்பு ஏற்பட்டு குணமடைந்த பிரச்சினை ஒன்று மீண்டும் வந்துவிட்டது. இதனால் 4 மாதங்கள் வரை அவர் கிரிக்கெட் விளையாட முடியாது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டி20 உலகக்கோப்பை தொடரிலும் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

பிசிசிஐ எச்சரிக்கை
இந்நிலையில் NCA அதிகாரிகள் மீது பிசிசிஐ சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கால் பிரச்சினை காரணமாக சென்ற வீரருக்கு, எப்படி முதுகில் பிரச்சினை ஏற்பட்டது. அதுவரை பிசியோதெரபிஸ்ட் என்ன செய்துக்கொண்டிருந்தனர் என சரமாரியாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும் காயம் என வரும் வீரர்களை, நீண்ட நாட்களுக்கு சிகிச்சை தருகின்றனர். சரியாக குணமடையவில்லை என்ற குற்றச்சாட்டு வருகிறது. இது சரியில்லை எனக்குறிப்பிட்டுள்ளது.
Recommended Video

கிளம்பிய சர்ச்சைகள்
ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ருதுராஜ் கெயிக்வாட் ஆகியோருக்கு கூட சமீபத்தில் காயம் ஏற்பட்டு குணமடைய நீண்ட காலம் எடுத்துக்கொண்டனர். தற்போது தீபக் சஹாருக்கும் இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டுள்ளதால், தற்போது பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications