For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எங்களை மறந்துட்டீங்களே.. ஐபிஎல் விதிமுறையை வெளியிட்ட பிசிசிஐ.. கண்டுக்கொள்ளப்படாத இந்திய வீரர்கள்!

மும்பை: ஐபிஎல் தொடருக்கான அனைத்து விதிமுறைகளையும் பிசிசிஐ சார்பில் இருந்து வெயிடப்பட்டுள்ளது.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த தொடர் வரும் மார்ச் 26ம் தேதி தொடங்குகிறது. மே 29ம் தேதி வரை நடைபெறுகிறது.

கொரோனா காரணமாக லீக் போட்டிகள் அனைத்தையும் மும்பை மற்றும் புனேவில் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 பிசிசிஐ காலக்கெடு

பிசிசிஐ காலக்கெடு

அதன்படி கொரோனா விதிமுறைகளை பிசிசிஐ இன்று தெரிவித்துள்ளது. அதில் அனைத்து அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் வரும் மார்ச் 8ம் தேதிக்குள் மும்பைக்கு வந்துவிட வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது. அங்கு ஒவ்வொரு வீரரும் குவாரண்டைன் செய்யப்பட்ட பிறகு தான் அணியுடன் இணைய அனுமதிக்கப்படுவார்கள்.

கொரோனா பரிசோதனைகள்

கொரோனா பரிசோதனைகள்

கொரோனா பரவல் அதிகம் இருப்பதால், ரிஸ்க் எடுக்க விரும்பாத பிசிசிஐ, ஒவ்வொரு வீரருக்கும் 3 முறை பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. இந்த மூன்றிலும் நெகட்டீவ் வந்தால் தான் மார்ச் 14ம் தேதி முதல் பயிற்சிகாக அனுமதிக்கப்படுவார்கள். அதன் பின்னர் தான் போட்டிகளுக்கே அனுப்பப்படுவார்கள்.

 இந்திய வீரர்களின் நிலை

இந்திய வீரர்களின் நிலை

இந்நிலையில் தற்போது இலங்கை தொடரில் பங்கேற்றிருக்கும் வீரர்களின் நிலைமை என்ன ஆவது என்ற குழப்பம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. இரு அணிகளும் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் மார்ச் 16ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இவர்களுக்காகவும் புதிய விதிமுறைகளை பிசிசிஐ விதிக்கவுள்ளது.

புது விதிகள்

புது விதிகள்

இலங்கை தொடரில் உள்ள இந்திய வீரர்கள் தற்போது பயோ பபுள் வளையத்திற்குள் தான் உள்ளனர். எனினும் அது கடுமையான பபுளாக இல்லை. அவர்கள் அனைவரும் தனி விமானம் மூலம் நேரடியாக அணிகளின் பபுளுக்கு மாற்றப்படுவார்கள். அங்கு 2 அல்லது 3 நாட்கள் குவாரண்டைன் இருந்த பின்னர் பயிற்சிகளுக்காக அனுமதிக்கப்படுவார்கள் எனத்தெரிகிறது. எனினும் இது பாதுகாப்பானதா என ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

.
Story first published: Wednesday, March 2, 2022, 18:19 [IST]
Other articles published on Mar 2, 2022
English summary
IPL 2022: BCCI makes a individual biobubble plan for Indian players who are in Srilanka series players
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+