மும்பை அணிக்கு ஆப்பு.. ஐபிஎல் அட்டவணையில் பிசிசிஐ அதிரடி மாற்றம்.. கொண்டாட்டத்தில் மற்ற அணிகள்!
மும்பை: ஐபிஎல் தொடரில் மகிழ்ச்சியாக இருந்த மும்பை அணிக்கு மட்டும் பெரிய ஆப்பு வைத்துள்ளது பிசிசிஐ.
ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதிகள் மற்றும் நடைபெறும் மைதானங்கள் குறித்து நேற்று தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டி வரும் மார்ச் 26ம் தேதி தொடங்கி இறுதிப்போட்டி வரும் மே 29ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி நடக்கும் மைதானங்கள்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக போட்டிகள் அனைத்தையும் மும்பை, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய 3 நகரங்களில் மட்டும் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி மும்பை வான்கடே, DY பாட்டில், ப்ராபோர்ன் மற்றும் புனே மைதானங்களும் அகமதாபாத் மோதிரா மைதானமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

லீக் சுற்று விவரங்கள்
மொத்தமுள்ள்ள 70 லீக் போட்டிகளில் 55 போட்டிகள் மும்பையில் உள்ள 3 கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறவிருக்கிறது. மீதமுள்ள 15 போட்டிகள் புனேவில் நடக்கிறது. அகமதாபாத்தில் உள்ள மோதிரா மைதானத்தில் ப்ளே ஆஃப் போட்டிகள் அனைத்துமே நடைபெறும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரபட்சமா?
இதில் தான் பிரச்சினையே. அதாவது மற்ற அணிகள் அனைத்தும் தங்களது ஹோம் மைதானங்களை விடுத்து, விளையாட வேண்டும். மும்பை அணி மட்டும் ஹோம் மைதானமான வான்கடேவில் விளையாடுவதா? இது எந்தவகையில் நியாமம் என மற்ற அணிகள் போர்க்கொடி தூக்கின. ஏனென்றால் வான்கடேவில் மும்பை அணியின் பலம் மிகப்பெரியதாகும்.

முடிவுகட்டிய பிசிசிஐ
இந்நிலையில் இதற்கு பிசிசிஐ முடிவுகட்டியுள்ளது. இதுகுறித்து பேசிய மூத்த அதிகாரி ஒருவர், மும்பை அணிக்கு வான்கடேவில் போட்டி ஏற்பாடு செய்யப்பட மாட்டாது. அவர்கள் அதற்கு பதிலாக புனேவில் தங்களுடைய போட்டிகளை எதிர்கொள்வார்கள். இதன் மூலம் எந்தவொரு அணிக்கும் ஹோம் அட்வாண்டேஜ் கிடையாது என்பது உறுதியாகியுள்ளது.
Recommended Video

அட்டவணை மாற்றங்கள்
இதனையடுத்து போட்டி அட்டவணைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, மார்ச் முதல் வாரத்தில் அனைத்து அணிகளின் முழு அட்டவணையும் வெளியிடப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. அநேகமாக முதல் போட்டி சென்னை - மும்பை அணிகளுக்கு தான் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications