Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொரோனாவால் பாடம் கற்ற பி.சி.சி.ஐ. - 15வது ஐ.பி.எல். தொடருக்கான பிளான் "பி" ரெடி !!

மும்பை: ஐ.பி.எல். 15வது சீசன் 10 அணிகளுடன் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. புதிய அணிகளாக லக்னோ, அகமதாபாத் சேர்க்கப்பட்டுள்ளன

இந்த தொடருக்கான ஏலம் பிப்ரவரி முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேற மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன

பி.சி.சி.ஐ. நடவடிக்கை

பி.சி.சி.ஐ. நடவடிக்கை

ஏற்கனவே ஐ.பி.எல். 14வது சீசன் இந்தியாவில் நடைபெற்ற போது கொரோனா கடுமையாக அதிகரித்து. வீரர்கள் சிலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட போட்டிகள் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரக்த்தில் நடைபெற்றது. இதே போன்ற நிலை மீண்டும் ஏற்படாமல் இருக்க பி.சி.சி.ஐ. தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது

5 நகரங்கள்

5 நகரங்கள்

அதன் படி, தற்போது அச்சுறுத்தும் கொரோனா அலை, மார்ச் மாதத்திற்குள் குறைந்தால் கடந்த ஆண்டை போல் 5 நகரங்களில் மட்டும் ஐ.பி.எல். போட்டிகளை நடத்த பி.சி.சி.ஐ. முடிவு எடுத்துள்ளது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் எதிர்பார்த்த படி குறையவில்லை என்றால் ஐ.பி.எல். போட்டியை மார்ச்சில் தொடங்குவதற்கு பதில் ஏப்ரல் 2வது வாரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது.

பிளான் “பி”

பிளான் “பி”

அதற்கும் நிலைமை ஒத்து வரவில்லை என்றால், அனைத்து ஐ.பி.எல். போட்டிகளையும் மும்பையிலேயே நடத்த பி.சி.சி.ஐ. முடிவு எடுத்துள்ளது. அதன் படி மும்பையில் உள்ள வான்கடே மைதானம், நவி மும்பையில் உள்ள டி.ஓய். பாட்டில் மைதானம் மற்றும் பிராபோர்ன் மைதானம் ஆகியவற்றில் போட்டியை நடத்த பி.சி.சி.ஐ. திட்டமிட்டு உள்ளது.

வெளிநாட்டில் ஐ.பி.எல்?

வெளிநாட்டில் ஐ.பி.எல்?

அதன்படி, வீரர்களை விமானம் மூலம் அலைய வைக்காமல் ஹோட்டல் மற்றும் மைதானத்திற்கு மட்டும் கடும் பையோ பபுள் விதிகளை வைத்து அழைத்து வர முடியும். இதனை தான் பி.சி.சி.ஐ. பிளான் பியாக கருதுகிறது. மும்பையிலும் கொரோனா அச்சுறுத்தல் இருந்தால் தொடர் முழுவதையும் கடந்த சீசனை போல் வெளிநாட்டில் நடத்த பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளது. ஆனால் இப்போது ஏற்பட்டுள்ள ஓமைக்கரான் பாதிப்பு வந்த வேகத்திலே சென்றுவிடும் என்பதால், பி.சி.சி.ஐ. ஐ.பி.எல். தொடரை நம்பிகையுடன் நடத்த திட்டமிட்டுள்ளது.

Story first published: Friday, January 7, 2022, 20:45 [IST]
Other articles published on Jan 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+