Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இந்த முறை மும்பை இல்லை” ஐபிஎல் முதல் போட்டியில் சிஎஸ்கேவுடன் மோதப்போகும் அணி?.. அப்டேட் வெளியானது!

மும்பை: ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியுடன் மோதப்போவது யார் என்றும் அட்டவணை குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.

நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகளில் பிசிசிஐ தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஆலோசனைக்கூட்டங்கள் நிறைவடைந்துள்ளன.

அதன்படி ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 26ம் தேதி தொடங்கி இறுதிப்போட்டி வரும் மே 29ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் போட்டியில் சிஎஸ்கே

முதல் போட்டியில் சிஎஸ்கே

இந்த முறை 10 அணிகள் மோதுவதால் போட்டி அட்டவணை, விதிமுறைகள், போட்டி வடிவங்கள் என அனைத்திலும் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. 10 அணிகளும் 2 குரூப்களாக பிரிந்து மொத்தம் 70 போட்டி நடைபெறவுள்ளது. இதற்கான முழு அட்டவணை இந்த வாரத்தில் வெளியாகும்.

வழக்கம் போலவே போட்டி

வழக்கம் போலவே போட்டி

ஐபிஎல்-ல் வழக்கமாக சாம்பியன் பட்டம் வென்ற அணி தான், அடுத்த ஆண்டில் முதல் ஆட்டத்தை எதிர்கொள்ளும். அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தான் இந்தாண்டு முதல் போட்டி இருக்கும். சிஎஸ்கேவுக்கு எதிராக மும்பை அணி தான் விளையாடும் என அனைவரும் எதிர்பார்த்துக்காத்திருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

யார் அந்த அணி

யார் அந்த அணி

அதாவது மும்பை இந்தியன்ஸ் முதல் போட்டியில் ஆடவில்லை என்றும் சிஎஸ்கே - கொல்கத்தா அணிகள் தான் முதலில் மோதவுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்தாண்டு இறுதிப்போட்டியில் இந்த இரு அணிகள் தான் இறுதிப்போட்டியில் மோதின. எனவே விட்ட இடத்தில் இருந்து தொடரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Recommended Video

Chennai Super Kings announce launch of Super Kings Academy | Salem | Chennai | Oneindia Tamil
உண்மை காரணம் என்ன

உண்மை காரணம் என்ன

முதலில் மும்பை அணி தான் விளையாடும்படி இருந்தது. ஆனால் முதல் போட்டி வான்கடேவில் நடைபெறுகிறது. மும்பை அணிக்கு ஹோம் அட்வாண்டேஜ் கொடுக்கக்கூடாது என்பதால், வேறு வழியின்றி கொல்கத்தா அணியை சிஎஸ்கேவுடன் மோதவைத்துள்ளனர். புதிய வீரர்கள் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

Story first published: Monday, February 28, 2022, 12:07 [IST]
Other articles published on Feb 28, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+