நம்ம கங்குலியா இப்படி சொன்னது?.. விராட் கோலியின் இந்திய அணி வாய்ப்பு.. பிசிசிஐ சார்பில் பளார் பதில்
மும்பை: விராட் கோலியின் இந்திய அணி வாய்ப்பு குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி தற்போது ஐபிஎல் தொடரில் பல விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார்.
ஆர்சிபி அணி சிறப்பாக விளையாடி வரும் போதும், விராட் கோலியால் சிறப்பான பங்களிப்பை கொடுக்க முடியவில்லை.

விராட் கோலி ஃபார்ம்
நடப்பு சீசனில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 236 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இதில் 3 முறை டக் அவுட்டாகி தனது கிரிக்கெட் வாழ்கையில் மோசமான சீசனை சந்தித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் கோலியின் சராசரி 19 ரன்கள் மட்டுமே உள்ளது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

இந்திய அணியில் வாய்ப்பு
டி20 உலகக்கோப்பை தொடரை மனதில் வைத்து தற்போது இருந்தே இந்திய அணி தயார் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தென்னாப்பிரிக்கா மற்றும் அயர்லாந்து தொடர்களில் விராட் கோலிக்கு ஓய்வு தரப்படவுள்ளது. இதே போல புஜாராவுக்கு போடப்பட்ட நிபந்தனையை போன்று விராட் கோலியை உள்நாட்டு தொடர்களில் விளையாட வைக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

கங்குலி பளார்
இந்நிலையில் இதுகுறித்து கங்குலி பேசியுள்ளார். அதில், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் ஃபார்ம் குறித்து எனக்கு துளிக்கூட கவலையே இல்லை. விராட் கோலி மிகவும் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். டி20 உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் நிறைய காலம் உள்ளது. அதற்குள்ளாக கோலி தனது பழைய அதிரடிக்கு திரும்புவார் என எனக்கு நம்பிக்கை உள்ளது எனக் கூறினார்.

ஓய்வு அறிவிப்பு
இது ஒருபுறம் இருக்க, பிசிசிஐ அதிகாரி ஒருவர் பேசுகையில், இந்திய அணியின் அனைத்து சீனியர் வீரர்களுக்கும் 3 - 4 வாரங்கள் ஓய்வளிக்கப்படவுள்ளது. அவர்கள் நேரடியாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு செல்லவுள்ளனர். புத்துணர்ச்சியுடன் அவர்கள் அனைவருமே கம்பேக் தருவார்கள் எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications