Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் 2022 முக்கிய அப்டேட்.. சிஎஸ்கே வெற்றி விழாவில் ஜெய் ஷா கொடுத்த சர்ஃப்ரைஸ்..ரசிகர்கள் உற்சாகம்

சென்னை: ஐபிஎல் தொடர் குறித்து முக்கிய அப்டேட்டை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

2021ம் ஆண்டு ஐபிஎல் தொடர் கொரோனாவுக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

இந்தாண்டு தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இதனையடுத்து அனைவரின் கவனமும் 2022ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் மீது திரும்பியுள்ளது. அடுத்தாண்டு முதல் ஐபிஎல் தொடரில் 2 புதிய அணிகள் சேர்க்கப்படவுள்ளன. இதே போல 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மெகா ஏலமும் நடைபெறவுள்ளதால் ஐபிஎல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏகபோகத்திற்கு எழுந்துள்ளது.

 மெகா ஏலம் எப்போது

மெகா ஏலம் எப்போது

இந்த மெகா ஏலத்தின் போது 3 முதல் 4 வீரர்களை தவிர்த்து ஒட்டுமொத்த அணி வீரர்களும் மாற்றப்படுவார்கள் என்பதால் அனைத்து அணிகளும் புதிய வீரர்களுடன் களமிறங்கும். இந்த ஏலம் வரும் ஜனவரி அல்லது ஃபிப்ரவரி மாதங்களில் நடைபெறலாம் எனத் தெரிகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

ஐபிஎல் 2022 அப்டேட்

ஐபிஎல் 2022 அப்டேட்

இந்நிலையில் ஐபிஎல் 2022 குறித்து பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா முக்கிய அப்டேட் கொடுத்துள்ளார். அதாவது அடுத்தாண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் தான் நடைபெறும் என அறிவித்துள்ளார். இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி விழா நடைபெற்றது. அப்போது தோனி தனது கடைசி டி20 போட்டி சென்னையில் தான் நடைபெறும். அது அடுத்தாண்டு நடக்கலாம், அல்லது 5 ஆண்டுகள் கழித்து நடக்கலாம் எனக்கூறினார்.

ஜெய் ஷா பேச்சு

ஜெய் ஷா பேச்சு

இதன் பின்னர் பேசிய ஜெய் ஷா, சென்னை அணி சேப்பாக்கத்தில் விளையாடுவதை காண வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர் என்பதை நான் அறிவேன். அந்த தருணம் நடைபெறுவதற்கு இன்னும் நீண்ட நாட்கள் இல்லை. 15வது ஐபிஎல் தொடர் நிச்சயம் இந்தியாவில் தான் நடக்கும். 2 புதிய அணிகளுடன் இன்னும் சுவாரஸ்யமாக தொடங்கும் எனக்கூறினார். இது தோனியின் ஆசை நிறைவேறும் என்பது போல மறைமுகமாக கூறப்பட்டது.

Story first published: Saturday, November 20, 2021, 19:53 [IST]
Other articles published on Nov 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+