
வீரர்களுக்கு கொரோனா
முதலில் அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் ஃபெர்ஹாட்டிற்கு கொரோனா உறுதியானது. அதன்பின்னர் மசாஜ் தெரபிஸ்ட் சேட்டன் குமார், வீரர் மிட்செல் மார்ஷ், அணி மருத்துவர் - அபிஜித் சல்வி, டிஜிட்டல் ஊழியர் ஆகாஷ் மானே ஆகியோர் என மொத்தமாக 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

பரிசோதனை முடிவுகள்
இதனையடுத்து அனைத்து வீரர்களுக்கும் கடந்த 4 நாட்களாக பிசிஆர் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. இதில் மற்ற அனைத்து வீரர்களுக்கும் நெகட்டீவ் என முடிவு வந்த போதும், சந்தேகத்தின் அடிப்படையில் குவாரண்டைன் செய்யப்பட்டுள்ளார்.

நீடித்த குழப்பம்
இதுஒருபுறம் இருக்க, டெல்லி அணிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் நாளை போட்டி உள்ளது. இந்த போட்டி புனே மைதானத்தில் நடைபெறவிருந்தது. ஆனால் இன்னும் டெல்லி அணி வீரர்கள் மும்பை நகரத்தை விட்டே வெளியேறவில்லை. பயிற்சிகளும் இன்னும் தொடங்கவில்லை. இதனால் ரசிகர்கள் போட்டி நடைபெறுமா என்ற குழப்பத்தில் உள்ளனர்.

பிசிசிஐ நடவடிக்கை
இந்நிலையில் இதற்காக பிசிசிஐ அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது டெல்லி அணியை புனேவுக்கு அனுப்புவதற்கு பதிலாக, பஞ்சாப் அணியை மும்பைக்கு அனுப்பவுள்ளது. போட்டி நடைபெறும் இடத்தையும் மும்பைக்கு மாற்றியுள்ளது. இதன் மூலம் இன்னும் சிறிது அவகாசம் கிடைக்கும் என்ற காரணத்தால் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











