Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரவி சாஸ்திரி வாக்கு பலித்தது.. விராட் கோலி விவகாரத்தில் பிசிசிஐ அதிரடி நடவடிக்கை.. ரசிகர்கள் சோகம்!

மும்பை: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் விவகாரத்தில் பிசிசிஐ அதிரடி முடிவு எடுத்துள்ளது.

15வது ஐபிஎல் சீசன் கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் தான் டி20 உலகக்கோப்பைக்காக தயார் செய்யப்படுவார்கள்.

அந்த வகையில் விராட் கோலியின் நிலைமை தற்போது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

விராட் கோலியின் நிலைமை

விராட் கோலியின் நிலைமை

ஆர்சிபி அணி கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலி ஒரு பேட்ஸ்மேனாகவும் ஜொலிக்கவில்லை. இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 128 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இதில் 2 டக் அவுட்களும் அடங்கும். தொடர்ந்து சொதப்பி வருவதால், இனி அவரை இந்திய அணி ஜெர்ஸியிலாவது பார்ப்போமா என ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

பிசிசிஐ நடவடிக்கை

பிசிசிஐ நடவடிக்கை

இந்நிலையில், பிசிசிஐ அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. ஐபிஎல் முடிந்தவுடன் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவுடன் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் மோதுகிறது. இதுகுறித்து பேசிய தேர்வுக்குழு அதிகாரி ஒருவர், தென்னாப்பிரிக்க தொடரில் விராட் கோலிக்கு முழுவதுமாக ஓய்வு வழங்கப்படவுள்ளது. ஒரு வீரர் கடின காலத்தை எதிர்கொள்வது சகஜமான ஒன்று தான். எனவே சீனியர் வீரர்களுக்கு சற்று ஓய்வளித்துவிட்டு, இளம் படைக்கு வாய்ப்பு தரவுள்ளோம்.

மேலும் சில வீரர்கள்

மேலும் சில வீரர்கள்

ஒருவேளை விராட் கோலி விளையாட விரும்பினால், அதுகுறித்து ஆலோசிப்போம். அவரின் முடிவையும் மதிப்போம். எனினும் ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா போன்ற வீரர்களுக்கும் ஓய்வளிக்கும் முடிவில் தான் இருக்கிறோம். ஐபிஎல் முடிந்தவுடன் அனைத்திற்கும் பதில் கிடைத்துவிடும் எனக் கூறினார்.

Recommended Video

IPL 2022 விட்டு வெளியேறுங்க! Kohliக்கு Ravi Shastri Advice | OneIndia Tamil
சாஸ்திரியின் பேச்சு

சாஸ்திரியின் பேச்சு

இதே விஷயத்தை தான் ஏற்கனவே முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பகிர்ந்திருந்தார். அதில், விராட் மிகவும் நொந்துவிட்டார். மனதளவில் கோலிக்கு நிம்மதி என்பதே இல்லை. இப்படிப்பட்ட நிலைமையில் அவர் என்ன பயிற்சி எடுத்தாலும், அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. கோலிக்கு சிறிது காலம் ஓய்வு கொடுத்தே தீர வேண்டும். ஒன்றரை மாத அளவில் ஓய்வு கொடுத்தால் நிச்சயம் கம்பேக் தருவார் என கூறினார்.

Story first published: Wednesday, April 27, 2022, 17:35 [IST]
Other articles published on Apr 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+