Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கேவை கழட்டிவிட்ட மொயீன் அலி.. கடைசி வாய்ப்பும் போனது.. கடும் அதிருப்தியில் கேப்டன் தோனி!

மும்பை: பிசிசிஐ கொடுத்திருந்த கடைசி கட்ட வாய்ப்பையும் மொயீன் அலி தவறவிட்டிருப்பதால் சிஎஸ்கே பின்னடைவை சந்தித்துள்ளது.

Recommended Video

Moeen Ali வருவதிலும் சிக்கல்.. KKR-க்கு எதிரான போட்டியில் என்ன செய்ய போகிறது CSK?

ஐபிஎல் 15வது சீசன் கிரிக்கெட் திருவிழா வரும் சனிக்கிழமை ( மார்ச் 26 ) முதல் தொடங்கவுள்ளது.

மும்பை வான்கடேவில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

கழட்டிவிட்ட மொயீன்

கழட்டிவிட்ட மொயீன்

முதல் போட்டிக்கான ப்ளேயிங் 11லேயே கேப்டன் தோனி கடும் அதிருப்தியடைந்துள்ளார். முதலில் தீபக் சஹார், பின்னர் பிரிட்டோரியஸ் பங்கேற்க முடியாமல் போனது. சரி, அணியில் இருக்கும் சீனியர் வீரர்களை வைத்து சமாளிக்கலாம் என்ற பார்த்த போது, மொயீன் அலியும் கழட்டிவிட்டுள்ளார் மொயீன் அலி.

பிரச்சினை என்ன

பிரச்சினை என்ன

இங்கிலாந்தில் உள்ள மொயீன் அலி, இந்தியாவுக்கு வருவதற்கான விசாவுக்கு தாமதமாக விண்ணப்பித்துள்ளார். இதனால் அவருக்கு இன்னும் விசா கிடைக்காமல் உள்ளது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த சிஎஸ்கே அணி, எப்படியும் முதல் போட்டிக்கு வந்துவிடுவார் என்று நம்பிக்கொண்டிருந்தது.

ஆனால் அது கனவாகவே போய்விட்டது.

கடைசி வாய்ப்பு

கடைசி வாய்ப்பு

அதாவது 26ம் தேதி முதல் போட்டியில் ஆட வேண்டும் என்றிருந்தால் மொயீன் அலி இன்றைக்குள் மும்பை வந்து சேர வேண்டும். ஒவ்வொரு வீரரும் குறைந்தது 3 நாட்கள் குவாரண்டைன் இருந்த பின்னர் தான் அணிக்குள் சேர்க்கப்படுவார். அதன்படி இன்றைய தினமும் மொயீன் அலி வந்து சேர மாட்டார் என உறுதியாகியுள்ளது.

மாற்று வீரர் யார்?

மாற்று வீரர் யார்?

கடந்த சீசனில் 3வது வீரராக களமிறங்கி மொயீன் அலி ஏற்படுத்திய தாக்கம், சிஎஸ்கேவுக்கு பலமாக இருந்தது. இதே போல ஸ்பின்னராகவும் செயல்பட்டார். அவர் தற்போது இல்லாததால், மாற்று வீரராக ராபின் உத்தப்பா முதல் விக்கெட்டிற்கு களமிறங்குவார் என தெரிகிறது. சுழற்பந்துவீச்சில் கூடுதலாக மஹீஷ் தீக்‌ஷணா சேர்க்கப்படலாம்.

Story first published: Wednesday, March 23, 2022, 9:30 [IST]
Other articles published on Mar 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+