For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கொரோனாவை சமாளிச்சீங்க.. இத எப்படி சமாளிப்பீங்க.. டெல்லி அணிக்கு புது சிக்கல்.. பண்ட்-ன் பரிதாபம்!!

மும்பை: டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு கொரோனாவை தாண்டி இன்று மற்றொரு முக்கிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் 34வது போட்டியில் இன்று டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு கடந்த ஒரு வார காலமாக சிக்கல் மேல் சிக்கல் உருவாகி வருகிறது. அந்த அணியின் பிசியோதெரபிஸ்டுக்கு கொரோனா உறுதியான நிலையில், அடுத்தடுத்து 5 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனையடுத்து ஐபிஎல் ரத்து செய்யப்படுமா என்ற அளவிற்கு சென்று இறுதியில் போட்டி இடங்கள் மட்டும் மாற்றப்பட்டது.

சாதித்த டெல்லி

சாதித்த டெல்லி

இத்தனை சிக்கல்களுக்கு மத்தியிலும் டெல்லி அணி சாதித்து தான் வருகிறது. முக்கிய வீரர்கள் இல்லாத போதும், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து புள்ளிப்பட்டியலிலும் 6வது இடத்திற்கு முன்னேறியது.

புது பிரச்சினை

புது பிரச்சினை

இந்நிலையில் டெல்லி அணிக்கு பெரும் ஆப்பு வந்துள்ளது. அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் இன்றைய போட்டியில் இருக்க மாட்டார் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. பாண்டிங்கின் குடும்பத்தினர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால், பாண்டிங்கும் குவாரண்டைன் செய்யப்பட்டுள்ளார்.

பண்ட்-க்கு சிக்கல்

பண்ட்-க்கு சிக்கல்

டெல்லி அணியின் தூண் பாண்டிங் எனக்கூறலாம். ஆட்டத்தின் போது, அவரின் ஐடியாக்கள் தான் பெரும்பாலும் செயல்படுத்தப்படுகின்றன. ஃபீல்டிங் திட்டமும் அவர் செயல்படுத்துவது தான் எனத்தெரிகிறது. அவர் இல்லையென்றால் ரிஷப் பண்ட் என்ன செய்யப்போகிறார் என ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

Story first published: Friday, April 22, 2022, 17:46 [IST]
Other articles published on Apr 22, 2022
English summary
IPL 2022: Big blow for Delhi Capitals, Ricky Ponting will miss today's game against Rajasthan Royals
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+