For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடைசி நேரத்தில் இப்படியா..?? முன்னணி அணிக்கு ஏற்பட்ட இழப்பு.. ஐபிஎல்- ல் தொடரும் குழப்பங்கள்!

மும்பை: மிகப்பெரிய வீரர்கள் பட்டாளத்துடன் இருந்து வந்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு பெரும் இடி இறங்கியுள்ளது.

ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ளன. இதற்காக அனைத்து அணிகளும் இறுதிகட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தாண்டு புதிதாக சேர்க்கப்பட்டுள்ள லக்னோ மற்றும் குஜராத் அணிகளும் தலைசிறந்த பயிற்சியாளர்களுடன் சவால் கொடுத்து வருகிறது.

ஆர்சிபி புதிய கேப்டன் யார்?.. விராட் கோலியே கொடுத்த சூப்பர் அப்டேட்.. ரசிகர்கள் கொண்டாட்டம் - வீடியோஆர்சிபி புதிய கேப்டன் யார்?.. விராட் கோலியே கொடுத்த சூப்பர் அப்டேட்.. ரசிகர்கள் கொண்டாட்டம் - வீடியோ

பலமான அணி

பலமான அணி

குறிப்பாக லக்னோ அணி தான் இந்தாண்டு பெரும் பலத்துடன் காணப்பட்டது. ஏனென்றால் அந்த அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் முதலில் நியமிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து கொல்கத்தா அணிக்காக கோப்பையை வென்றுக்கொடுத்த கம்பீர், இந்த அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அவரின் யோசனையின் படி தான் டிகாக், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஹோல்டர், ஆவேஷ் கான், எவின் லீவிஸ் என அதிரடி வீரர்களை களமிறக்கியுள்ளது.

 லக்னோ அணிக்கு ஆப்பு

லக்னோ அணிக்கு ஆப்பு

இந்நிலையில் லக்னோ அணிக்கு பெரும் இடி இறங்கியுள்ளது. அதாவது அந்த அணியின் முன்னணி பவுலராக இருந்த மார்க் வுட் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த மார்க் வுட், இம்மாத தொடக்கத்தில் கை மூட்டில் ஏற்பட்ட காயத்தால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரால் சரிவர பந்துவீச முடியாது.

அவசர தேவை உள்ளது

அவசர தேவை உள்ளது

போட்டி நடைபெறும் மும்பை களங்கள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானவை. அவர்களை சமாளிக்க டெத் ஓவர்களில் நல்ல வேகத்தில் வீசக்கூடிய பவுலர்கள் தேவை. அதன்படி தான் மார்க் வுட் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் தற்போது, அவர் விலகியிருப்பதால், ஒரு வாரத்திற்குள் புதிய வீரரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி உள்ளது. புதிதாக ஒரு வீரரை ஒப்பந்தம் செய்து, அவர் குவாரண்டைனை முடித்துவிட்டு வர குறைந்தது 2 வாரங்கள் ஆகலாம்.

Recommended Video

IPL 2022: CSK Owner N srinivasan conversation with MS Dhoni and team mates | Oneindia Tamil
4 வது வீரர்

4 வது வீரர்

ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய 4வது இங்கிலாந்து வீரர் இவராகும். இதற்கு முன்னதாக குஜராத் அணி வீரர் ஜேசன் ராய் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் பயோ பபுள் காரணமாக வெளியேறினர். இவர்களை தொடர்ந்து ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் மார்க் வுட் ஆகியோரும் காயம் காரணமாக வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, March 18, 2022, 15:27 [IST]
Other articles published on Mar 18, 2022
English summary
Lucknow Super giants Player Mark wood opt out from IPL 2022, KL Rahul in shock
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X