இருந்த ஒன்னும் போச்சா..!! ரிஷப் பண்ட்-க்கு வந்த சோக செய்தி.. ஐபிஎல் முழுக்க டெல்லிக்கு ஆப்பு இருக்கு
மும்பை: டெல்லி அணியின் முக்கிய வீரர் ஒருவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் சூழல் உருவாகியுள்ளதால் ரிஷப் பண்ட் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
ஐபிஎல் தொடர் கடந்த சனிக்கிழமை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அயல்நாட்டு வீரர்கள் இல்லாமல் ஒவ்வொரு அணியும் சிரமப்படுவதை பார்க்க முடிந்தது. குறிப்பாக டெல்லி கேப்பிடல்ஸ் தான்.

டெல்லி அணியின் பரிதாபம்
டெல்லி அணியில் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், முஸ்திவிசூர் ரஹ்மான், லுங்கி இங்கிடி, ஆன்ரிக் நார்ட்ஜே, டிம் செய்ஃபெர்ட், ரோவ்மென் போவெல் என 7 அட்டகாசமான வீரர்கள் வாங்கப்பட்டனர். ஆனால் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் வெறும் 2 அயல்நாட்டு வீரர்களே இருந்தனர். 5 பேர் இன்னும் இந்தியாவுக்கே வரவில்லை. வெறும் 2 பேரை மட்டுமே வைத்துக்கொண்டு ரிஷப் பண்ட் சமாளித்தார்.

காரணம் என்ன
டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் ஆகியோர் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் உள்ளனர். டெல்லி அணியின் முதல் 5 போட்டிகளில் இருக்க மாட்டார்கள்.
பவுலிங்கில் முஸ்திவிசூர் ரஹ்மான் மற்றும் லுங்கி இங்கிடி ஆகியோர் குவாரண்டைனில் உள்ளனர். டெல்லி அணியின் நம்பிக்கை நாயகனான ஆண்ரிக் நார்ட்ஜே கையில் காயம் ஏற்பட்டு விளையாட முடியாமல் உள்ளார். கூடிய விரைவில் இவர்கள் வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் பண்ட் இருந்தார்.

அடுத்த இடி
இந்நிலையில் அவருக்கு பெரும் இடி இறங்கியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் பங்கேற்றிருந்த ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷுக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் அந்த தொடரில் இருந்தே வெளியேறிவிட்டார். காயம் சரியாக ஓய்வு தேவை என்பதால் ஐபிஎல் தொடரில் இருந்தும் வெளியேறவுள்ளதாக கூறப்படுகிறது. பெரும் நம்பிக்கையுடன் ரூ.6.5 கோடி போட்டு எடுக்கப்பட்ட வீரரை டெல்லி மிஸ் செய்யப்போகிறது.

ரிஷப் பண்ட்-க்கு ஆப்பு
ஏற்கனவே ஆன்ரிக் நார்ட்ஜே காயத்தால் ஏமாற்றிவிட்டார், தற்போது அதிரடி ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷும் விலகியதால் டெல்லி அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ரிஷப் பண்ட்-க்கு ஆப்பு என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் டிம் செய்ஃபெர்ட் மற்றும் ரோவ்மென் போவல் ஆகியோர் முதல் போட்டியில் பெரிதாக சோபிக்கவில்லை.


Click it and Unblock the Notifications