Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கேவுக்கு மெகா ஜாக்பாட்.. கொல்கத்தா அணியின் 2 தூண்கள் விலகல்.. குழப்பத்தில் சிக்கிய ஸ்ரேயாஸ்!!

மும்பை: சென்னை அணியில் முக்கிய வீரர்கள் இல்லை என்ற கவலையில் இருந்த ரசிகர்களுக்கு நற்செய்தி கிடைத்துள்ளது.

ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் வரும் மார்ச் 26ம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் போட்டியில் சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

மும்பை வான்கடேவில் நடைபெறும் இந்த போட்டிக்கான ப்ளேயிங் 11 முடிவுகள் தற்போது இருந்தே எடுக்கப்பட்டு வருகின்றன

 சிஎஸ்கேவுக்கு பின்னடைவு

சிஎஸ்கேவுக்கு பின்னடைவு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முன்னணி பவுலரான தீபக் சஹார் காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்கு மாற்றாக பார்க்கப்பட்ட டுவைன் பிரிட்டோரியஸ் வருவதற்கு தாமதமாகுமாம். இது ஒறு புறம் இருக்க, அணியின் தூணாக இருந்த மொயீன் அலியும் விசா பிரச்சினையால் வரவில்லை. இதனால் கொல்கத்தா அணியை எப்படி சமாளிப்பது என்ற கவலை சிஎஸ்கே ரசிகர்களுக்கு இருந்தது.

 மகிழ்ச்சியான செய்தி

மகிழ்ச்சியான செய்தி

இந்நிலையில் சிஎஸ்கேவுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. கொல்கத்தா அணியின் முன்னணி பவுலரான பேட் கம்மின்ஸ் மற்றும் ஓப்பனிங் வீரர் ஆரோன் ஃபிஞ்ச் ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொல்கத்தா அணியின் முதல் 5 போட்டிகளிலும் விளையாட மாட்டார்கள் என அணியின் ஆலோசகர் டேவிட் ஹஸி கூறியுள்ளார்.

சிஎஸ்கேவின் பலன் என்ன

சிஎஸ்கேவின் பலன் என்ன

பேட் கம்மின்ஸ் தற்போது அட்டகாசமான ஃபார்மில் இருக்கிறார். பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணிலேயே வாட்டி எடுத்துவிட்டார். அவர் மட்டும் இருந்தால், சிஎஸ்கேவின் டாப் ஆர்டருக்கு அச்சுறுத்தலாக இருக்கும். இது ஒருபுறம் இருக்க, பிஞ்ச் இல்லையென்றால் கொல்கத்தா அணியின் டாப் ஆர்டர் பலவீனமாகும். தற்போது ஃபார்மில் இல்லாத ரகானே தான் ஓப்பனிங் ஆடுவார் என்பது சிஎஸ்கேவுக்கு அட்வாண்டேஜாக இருக்கலாம்.

Recommended Video

IPL 2022: CSK Leg Spinner Prashant solanki bowling like warne in Nets | OneIndia Tamil
ஏன் விளையாடவில்லை

ஏன் விளையாடவில்லை

ஆஸ்திரேலிய அணி தற்போது பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த தொடர் வரும் ஏப்ரல் 5ம் தேதியன்று தான் முடிவடைகிறது. இதில் பங்கேற்றுள்ள கம்மின்ஸ் மற்றும் ஃபிஞ்ச் ஆகியோர் குவாரண்டைன் காலத்தை முடித்துவிட்டு, கொல்கத்தா அணியில் இணைய ஏப்ரல் 10ம் தேதிக்கு மேல் ஆகலாம். அதற்குள்ளாக அந்த அணி 5 லீக் போட்டிகளில் விளையாடிவிடும்.

Story first published: Wednesday, March 23, 2022, 16:23 [IST]
Other articles published on Mar 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+