Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL - பிளேயிங் லெவனில் சிஎஸ்கே வைத்த ஆச்சரியம்.. முக்கிய வீரருக்கு அணியில் இடமில்லை.. என்ன காரணம்?

மும்பை: ஐபிஎல் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் சென்னையும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இரவு நேரத்தில் பனிபொழிவு அதிகம் இருக்கும் என்பதால் பந்துவீச்சாளர்களுக்கு அது சாதகமாக இருக்காது என்பதால் இந்த முடிவை எடுத்ததாக ஸ்ரேயாஸ் ஐயர் கூறினார்.

இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி 3 வெளிநாட்டு வீரர்களை வைத்து விளையாடுகிறது. ஆண்டிரு ரஸில், சாம் பில்லிங்ஸ் மற்றும் சுனில் நரைன் பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.

சுழற்பந்துவீச்சாளர்

சுழற்பந்துவீச்சாளர்

சென்னை அணி தனது பிளேயிங் லெவனில் ஒரு டிவிஸ்ட் வைத்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் மொயின் அலி இல்லை என்பதால், 2வது சுழற்பந்துவீச்சாளராக தீக்சானா இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் மிட்செல் சாண்டனர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஹங்கர்கேகர்

ஹங்கர்கேகர்

இதே போன்று அண்டர் 19 அதிரடி வீரர் ஹிங்கர்கேகர் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் இல்லை. இதனால் அவருக்கு பதிலாக அதிரடி ஆல்ரவுண்டர் சிவம் துபே சென்னை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சிஎஸ்கே அணியின் இந்த டிவிஸ்ட் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

என்ன காரணம்?

என்ன காரணம்?

ஹங்கர்கேகர் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்க கூடியவர். ஆனால் அவருக்கு ஏன் இடமில்லை என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.ஆனால் சிஎஸ்கேவின் இந்த முடிவுக்கு பின்னால் 2 காரணம் உள்ளது. ஒன்று சிவம் துபே இடதுகை பேட்ஸ்மேன். கீழ் வரிசையில் இடதுகை பேட்ஸ்மேன்கள் சுலபமாக சிக்சர் அடிக்க முடியும்.

Recommended Video

IPL 2022 : Deepak Chahar Starts Training For Chennai Super Kings | Oneindia Tamil
வான்கடே மைதானம்

வான்கடே மைதானம்

மேலும் வான்கடே மைதானத்தில் ஒரு முனையில் உள்ள எல்லை கோடு சிறியதாக இருக்கும். இதனால் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு சிக்சர் அடிக்க ஏதுவாக இருக்கும். அதை தவிர 2வது காரணம், ஹங்கர்கேகரின் திறமையை தொடக்கத்திலேயே மற்ற வீரர்களுக்கு காட்டாமல், தொடரின் முக்கிய கட்டத்தில் ஹங்கர்கேரை களமிறக்கி எதிரணிக்கு சர்பரைஸ் தரலாம் என்று சிஎஸ்கே நினைக்கலாம்.

Story first published: Saturday, March 26, 2022, 20:02 [IST]
Other articles published on Mar 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+