அனுஷ்கா சர்மாவின் கெட்ட நேரம் தான்.. விவாகரத்து பண்ணுங்க.. விராட் கோலியை வம்பிழுத்த பாலிவுட் நடிகர்
மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சரிவுக்கு அவரது மனைவி அனுஷ்கா சர்மா தான் காரணம் என்று பாலிவுட் நடிகர் கேஆர்கே விமர்சித்துள்ளார்.
எப்போதும் சர்ச்சைக்குரிய கருத்தை கூறி, ரசிகர்களிடம் அடி வாங்குவதையே தினசரி வேலையாக பார்த்து வருபவர் பாலிவுட் நடிகர் கேஆர்கே எனப்படும் கமல் கான்.
நம்ம ஊர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் போல், பாலிவுட்டில் அவர். ஆனால் ஸ்ரீனிவாசனின் லத்திகா படமாவது எப்படியோ இங்கு 300 நாள் ஒடியது.

யார் இந்த கேஆர்கே?
ஆனால், கேஆர்கே படத்தை காசு கொடுத்தால் கூட திரையரங்கு உரிமையாளர்களே ஐயா சாமி ஆளை விடுங்க என்று சொல்லிவிடுவார்கள். அந்த அளவுக்கு எல்லா பக்கமும் வம்பிழுத்து வைத்துள்ளார் மனுஷன். பாலிவுட் மட்டுமல்ல கோலிவுட், டோலிவுட், ஹாலிவுட் என்று எந்த வுட்டையும் விடுவதில்லை. நடிகர் ரஜினி, விஜய் குறித்து அவர் போட்ட ட்வீ ட்டுக்கு தமிழக சினிமா ரசிகர்கள் அவரை போட்டு தாக்கினர்.

தடை வாங்கியவர்
மோடி பிரதமர் ஆனால், நாட்டை விட்டு சென்றுவிடுவேன் என்று கூறிய கமல் கான், உண்மையிலேயே துபாய்க்கு சென்று தங்கினார். டிவிட்டரில் எப்போதும் சண்டை போடுவதால், இவரது வலைத்தள பக்கம் பலமுறை முடக்கப்பட்டுள்ளது என்றால் பார்த்து கொள்ளுங்கள். தற்போது இந்த கேஆர்கே கிரிக்கெட் பக்கம் திரும்பியுள்ளார்.

கோலி ஃபார்ம்
விராட் கோலி சதம் விளாசி கிட்டதட்ட இரண்டரை ஆண்டுகிள் ஆகிறது. அவருடைய பேட்டிங் நாளுக்கு நாளுக்கு பாதிக்கப்பட்டு வருகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் கூட தொடர்ந்து 2 முறை முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார் விராட் கோலி. விராட் கோலி மீண்டும் பழைய மாதிரி வருவார் என்று ரசிகர்கள் நம்பிக்கையில் உள்ளனர்.

அனுஷ்கா சர்மா காரணம்
ஆனால் பாலிவுட் நடிகர் கேஆர்கே மீண்டும் ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார். அதில், நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்த பிறகு தான் விராட் கோலியின் பேட்டிங் பாதிக்கப்பட்டுள்ளது. அனுஷ்கா சர்மா, விராட் வாழ்க்கைக்கு கெட்ட நேரத்தை கொண்டு வந்துவிட்டார். இதனால் அனுஷ்கா சர்மாவை விவாகரத்து செய்தால் மட்டுமே கோலியால் பழைய மாதிரி விளையாட முடியும் என்று ட்வீ ட் போட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.


Click it and Unblock the Notifications