Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“வயசானாலும் அது மாறாது” சிஎஸ்கேவை காப்பாற்ற போவது அந்த 2 வீரர்கள் தான்.. அடித்துக்கூறும் பிராட் ஹாக்

மும்பை: சென்னை அணியில் இந்தாண்டு மிக முக்கிய தூண்களாக விளங்கப்போவது இரண்டே இரண்டு வீரர்கள் தான் என முன்னாள் வீரர் பிராட் ஹாக் அடித்துக்கூறியுள்ளார்.

ஐபிஎல் 15வது சீசன் தொடர் வரும் மார்ச் 26ம் தேதி தொடங்கி மே 29ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதற்கான அட்டவணையை இறுதி செய்யும் பணிகளில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த வாரத்தில் அவை வெளியாகலாம்.

சிஎஸ்கேவின் பலம் என்ன

சிஎஸ்கேவின் பலம் என்ன

வழக்கம் போல இந்தாண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் முதலில் பயிற்சி முகாமை தொடங்கவுள்ளது. சூரத்தில் நாளை முதல் தோனி, உத்தப்பா, அம்பத்தி ராயுடு உள்ளிட்ட பல வீரர்களும் பயிற்சிகளை தொடங்கவுள்ளனர். இந்நிலையில் நடப்பு சாம்பியனான சென்னை அணியில் இந்தாண்டு ப்ளேயிங் 11 எப்படி இருக்கப்போகிறது என்ற கருத்துக்களை முன்னாள் வீரர்கள் கூறிவருகின்றனர். அந்த வரிசையில் பிராட் ஹாக் முக்கிய கருத்த முன்வைத்துள்ளார்.

அந்த 2 முக்கிய வீரர்கள்

அந்த 2 முக்கிய வீரர்கள்

அதில், அணியில் மிடில் ஆர்டர் மிகவும் முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது. லோயர் ஆர்டரில் அழுத்தம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அந்தவகையில் சீனியர் வீரர்களான ராபின் உத்தப்பா மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோர் சிஎஸ்கே அணியின் தூண்களாக விளங்கப்போகிறார்கள் என்பதில் எனக்கு பெரும் நம்பிக்கை உள்ளது. அவர்களின் அனுபவம் தான் பெரிய பலமாக இருக்கப்போகிறது

சமநிலையில் அணி

சமநிலையில் அணி

இதே போல ஓப்பனிங்கில் டேவான் கான்வே தான் களமிறங்குவது தான் சிறந்தது. டூப்ளசிஸ் என்ன பணியை செய்து வந்தாரோ, அதனை விட கான்வே சிறப்பாக செய்துக்கொடுப்பார் என நினைக்கிறேன். மற்றபடி சென்னை அணி தரமான 25 வீரர்களை அணிக்குள் எடுத்து வைத்துள்ளது. தோனியின் ஃபார்முலா அணியின் சமநிலையை உறுதி செய்துள்ளது எனக்கூறியுள்ளார்.

தோனியின் மெகா ப்ளான்

தோனியின் மெகா ப்ளான்

சென்னை அணியின் பெரும் பலம் என்னவென்றால் அதிகப்படியான வீரர்கள் தற்போது எந்தவித சர்வதேச போட்டிகளிலும் ஈடுபடாமல் உள்ளனர். இதனால் சுமார் 20 வீரர்கள் வரை பயிற்சி முகாம்கள் மூலம் அணியின் வியூகத்திற்கு வரவுள்ளனர். இவர்களுக்காக சூரத்தை பயிற்சி இடமாக தோனி தேர்வு செய்துள்ளார். ஏனென்றால் ஐபிஎல் போட்டிகள் பெரும்பாலும் மஹாராஷ்டிராவில் நடக்கிறது. அங்குள்ள மண்ணும் ( பிட்ச்-ம்), சூரத்தில் உள்ள பிட்ச்-ம் ஒரே மாதிரி தான் இருக்கும் எனத்தெரிகிறது.

Recommended Video

Chennai Super Kings announce launch of Super Kings Academy | Salem | Chennai | Oneindia Tamil
சிஎஸ்கே ப்ளேயிங் 11

சிஎஸ்கே ப்ளேயிங் 11

ருதுராஜ் கெயிக்வாட், டெவோன் கான்வே, மொயீன் அலி, அம்பத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, தோனி, மிட்செல் சாண்டனர், தீபக் சஹார், ஆடம் மில்னே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்.

Story first published: Tuesday, March 1, 2022, 9:40 [IST]
Other articles published on Mar 1, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+