Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொரோனாவையும் மீறி ஐபிஎல்.. பிசிசிஐ எடுத்த ரிஸ்க்.. டெல்லி,பஞ்சாப் வீரர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து

மும்பை: ஐபிஎல் 15வது சீசனிலும் கொரோனா தனது வேலையை காட்ட தொடங்கிவிட்டது. டெல்லி அணியில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் இன்றைய போட்டி நடைபெறுமா என்ற சிக்கல் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால், இந்த நிலை வரலாம் என்பதால் பிசிசிஐ முன்கூட்டியே ஒரு விதியை அறிவித்திருந்தது.

கொரோனா விதி

கொரோனா விதி

அதன் படி, அணியில் கொரோனா பாதித்தாலும், 12 பேர் உடல் தகுதியுடன் இருந்தால், அந்த ஆட்டம் கண்டிப்பாக நடைபெறும். ஒரு வேலை 12 பேர் கூட முழு உடல் தகுதியுடன் இல்லை என்றால், ஆட்டம் வேறு ஒரு தேதிக்கு மாற்றப்படும். அப்படியும் இல்லை என்றால், எதிரணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்.

பந்துவீச்சு

பந்துவீச்சு

ஆனால் தற்போது டெல்லி அணியில் 6 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், போட்டி திட்டமிட்டப்படி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்தது. இதனையடுத்து இரு அணி வீரர்களும் மைதானத்துக்கு வந்தனர். அப்போது, டாஸ் போடப்பட்டதில், அதனை வென்ற ரிஷப் பண்ட் பந்துவீசுவதாக அறிவித்தார்.

மாற்றம்

மாற்றம்

கொரோனா பாதிக்கப்பட்ட மிட்செல் மார்ஷ்க்கு பதிலாக சர்பிராஸ் கான் டெல்லி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து பேசிய ரிணப் பண்ட், துரதிஷ்டவசமாக அணியில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவிட்டதாகவும், இருப்பினும் அதனையும் மீறி நாங்கள் இன்று களத்துக்கு வந்துள்ளதாகவும் கூறினார். எதிர்மறையான விசயங்களை தள்ளிவைத்துவிட்டு எங்கள் கவனம் கிரிக்கெட் மீது மட்டுமே இருப்பதாகவும் ரிஷப் பண்ட் கூறினார்.

Recommended Video

IPL 2022 : Mumbai Indians vs Chennai Super Kings Match | Oneindia Tamil
மாயங் ரிட்டன்ஸ்

மாயங் ரிட்டன்ஸ்

கொரோனா பாதிக்கப்பட்ட மிட்செல் மார்ஷ்க்கு பதிலாக சர்பிராஸ் கான் டெல்லி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து பேசிய ரிஷப் பண்ட், துரதிஷ்டவசமாக அணியில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவிட்டதாகவும், இருப்பினும் அதனையும் மீறி நாங்கள் இன்று களத்துக்கு வந்துள்ளதாகவும் கூறினார். எதிர்மறையான விசயங்களை தள்ளிவைத்துவிட்டு எங்கள் கவனம் கிரிக்கெட் மீது மட்டுமே இருப்பதாகவும் ரிஷப் பண்ட் கூறினார்.

Story first published: Wednesday, April 20, 2022, 23:00 [IST]
Other articles published on Apr 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+