
4 நோ பால்
குறிப்பாக 4 ஓவரில் 4 நோ பால்கள் ஐதாராபாத் அணி வீசியது. எனினும் சிறப்பாக விளையாடிய ஜாஸ் பட்லர் 3 பவுண்டரி, 3 சிக்சர் விளாசி 28 பந்துகளில் 35 ரன்கள் விளாசினார். ஜெய்ஷ்வாலும் இளங்கன்று பயன் அறியாது என்ற வகையில் பெரிய ஷாட்களை ஆடி 20 ரன்கள் சேர்த்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.

நல்ல காரியம்
இந்த நிலையில், ராயல்ஸ் அணிக்காக 100வது போட்டியில் சஞ்சு சாம்சன் களமிறங்கினார். அவருக்கு பக்க பலமாக தேவுடட் படிக்கல் பொறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த நிலையில், ஐபிஎல் தொடர் மூலம் பல நல்ல காரியங்களை பிசிசிஐ மற்றும் அணிகள் மேற்கொண்டது ,

டாடா நிறுவனம்
அதன்படி, தென்னாப்பிரிக்காவில் ஐபிஎல் போட்டி நடைபெறும் போது அங்குள்ள பள்ளிகளுக்கு நிதியுதவி அளிப்பது, மும்பை இந்தியன்ஸ் சார்பாக ஏழை குழந்தைகளின் கல்வி செலவை ஏற்பது என பல நல்ல விசயங்களை அந்த அணி செய்தது. இதே போல் இந்த ஐபிஎல் தொடரில் ஒரு புதுவிதமான நல்ல காரியத்தை டாடா நிறுவனமும், பிசிசிஐயும் செய்துள்ளது.

5 லட்சம்
அதாவது பவுண்டரி லைனில் நிறுத்த வைக்கப்பட்டுள்ள டாடா பஞ்ச் என்ற போர்டில் பேட்ஸ்மேன் அடிக்கும் பந்து பட்டால் அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் உள்ள விலங்குகளை பராமரிக்க 5 லட்சம் ரூபாய் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை யாரும் அடிக்காத நிலையில், இன்று படிக்கல் அடித்த பந்து அந்த பலகையில் பட்டது. இதன் மூலம் 5 லட்சம் ருபாய் அந்த பூங்காவுக்கு கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications