Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே கேட்ச்சால் மாறிய ஆட்டம்.. சிஎஸ்கே விரித்த வலையில் சிக்கிய ஆர்சிபி.. கார்த்திக் கொடுத்த டென்ஷன்

மும்பை: ஐபிஎல் தொடரின் 22வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது.

சிஎஸ்கே அணி முதலில் பேட் செய்தது, இதில் உத்தப்பா, 50 பந்துகளில் 88 ரன்களும் விளாசினார். சிவம் துபே 46 பந்துகளில் 95 ரன்கள் குவித்தார்.

Recommended Video

CSK vs RCB: CSK flying high as Robin Uthappa, Shivam Dube unleash carnage | Oneindia Tamil

இதனால் சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 216 ரன்கள் எடுத்தது. 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று கடின இலக்குடன் ஆர்சிபி களமிறங்கியது.

சிஎஸ்கே பிளான்

சிஎஸ்கே பிளான்

ஆர்சிபி அணியின் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், இறுதியில் பிரபுதேசாய், தினேஷ் கார்த்திக்கின் அபார ஆட்டத்தால் பெங்களூரு அணி 193 ரன்கள் வரை குவித்து தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே முதல் முறையாக தனது யுத்தியை மாற்றியது. வேகப்பந்துவீச்சாளர்கள் சரி இல்லை என்பதை உணர்ந்த சிஎஸ்கே, தொடக்கம் முதலே சுழற்பந்துவீச்சை வைத்து ஆட்டத்தை நகர்த்தியது.

மாயஜால சுழல்

மாயஜால சுழல்

இதனால் பெரிய ஷாட்களை ஆடாமல் அமைதியாக ஆடிய ஆர்சிபி முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இலங்கை அணியின் மாயஜால சுழற்பந்துவீச்சாளர் தீக்சனா, சிஎஸ்கேவின் பந்துவீச்சில் ஜொலித்தார். அவர் எடுத்த 4 விக்கெட்டும், ஜடேஜாவின் அசத்தல் பவுலிங் மட்டுமே சிஎஸ்கேவின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

தோனி ஆலோசனை

தோனி ஆலோசனை

தீக்சனா பந்துவீசி விக்கெட் எடுத்த போது தோனி, அவருக்கு அறிவுரை வழங்கினார். இதே போன்று முகேஷ் சௌத்ரி வீசிய ஓவரை கார்த்திக் பறக்கவிட்ட போதும் தோனி, அவருக்கு ஆலோசனை வழங்கி ஆஃப் சைடில் ஓயிடாக வீச சொன்னார். கடந்த ஆட்டங்களில் தோனி இதனை செய்ய தவறினார். இதில் கிளிஸ் ஜார்டன் 2 ஓவரில் 20 ரன்கள் விட்டு கொடுத்தார்.

திருப்புமுனை

திருப்புமுனை

இதனால் அவருக்கு 3வது ஓவர் வழங்காமல் சிஎஸ்கே நிறுத்தியது. இதற்கு பிரிட்டோரியஸை அணியில் சேர்த்து இருக்கலாம். அதனை ஏன் சிஎஸ்கே செய்யவில்லை என்பது மில்லியன் டாலர் கேள்வி. இறுதியில், தினேஷ் கார்த்திக் தனி ஆளாக நின்று போராடிய போது, பிராவோ ஓவரில் அடித்த ஷாட்டை சிக்சர் லைனில் ஜடேஜா நின்று பிடித்தது ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

200வது போட்டி

200வது போட்டி

இதே போன்று ஆகாஷ் தீப் அடித்த பந்தை பாய்ந்து பிடித்து ராயுடு ஆட்டமிழக்க செய்தார். சிஎஸ்கேவின் ஃபில்டிங்கும் நன்கு முன்னேறி இருந்தது. ஆர்சிபி அணியில் ஹர்சல் பட்டேல் இல்லாதது பெரும் பின்னடைவை அந்த அணிக்கு ஏற்படுத்தியது. சிஎஸ்கே வீரர்கள் அடிக்கிறார்கள் என்று தெரிந்தும், தொடர்ந்து சுழற்பந்துவீச்சை பயன்படுத்தி ஆர்சிபி தவறு செய்தது. 200வது போட்டியில் சிஎஸ்கே அபார வெற்றி பெற்று இருக்கிறது இந்த வெற்றி தொடர வேண்டும் என்பதே சிஎஸ்கே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

Story first published: Wednesday, April 13, 2022, 15:08 [IST]
Other articles published on Apr 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+