Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்னும் ப்ளே ஆஃப் வாய்ப்பு உள்ளதா??.. சிஎஸ்கேவுக்கான இந்த கணக்குகளை பாருங்கள்.. ரசிகர்கள் நிம்மதி!

மும்பை: ஆர்சிபி அணியுடனான தோல்விக்கு பிறகு சிஎஸ்கே அணிக்கு இன்னும் ப்ளே ஆஃப் வாய்ப்புகள் உள்ளதா என்ற குழப்பம் நீடித்து வருகிறது.

ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளது.

தோனி தலைமையேற்ற முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றதால் நம்பிக்கையில் இருந்த ரசிகர்களுக்கு நேற்று மீண்டும் ஒரு ஏமாற்றமே கிடைத்தது.

சிஎஸ்கேவின் ப்ளே ஆஃப் வாய்ப்பு

சிஎஸ்கேவின் ப்ளே ஆஃப் வாய்ப்பு

ஆர்சிபி அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தற்போது வரை சென்னை அணி மொத்தமாக 10 போட்டிகளில் விளையாடி 6 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. மீதம் அவர்களுக்கு இன்னும் 4 போட்டிகள் உள்ளன. அந்த 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் சிஎஸ்கே 14 புள்ளிகளை பெற்றுவிடும்.

விதிமுறை மாற்றங்கள்

விதிமுறை மாற்றங்கள்

கடந்த சீசன் வரை 14 புள்ளிகள் பெற்றால் போதும் என்ற சூழல் இருந்த நிலையில் இந்தாண்டு 10 அணிகள் வந்ததால் 16 புள்ளிகள் குறைந்தபட்சம் தேவையாக உள்ளது. அதன்படி பார்த்தால் சிஎஸ்கேவுக்கு ரன் ரேட் அடிப்படையில் ஏதேனும் வாய்ப்புகள் கிடைத்தால் தான் உண்டு. ஆனால் அதற்கும் சென்னை அணி மீதமுள்ள 4 போட்டிகளில் அபார வெற்றி பெற வேண்டும். ஏனென்றால் சிஎஸ்கேவின் நெட் ரன்ரேட் -0.431 ஆக உள்ளது.

சாத்தியக்கூறுகள்

சாத்தியக்கூறுகள்

குஜராத் அணி ஏற்கனவே 16 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சென்றுவிட்டது. லக்னோ அணி 14 புள்ளிகளுடனும், ஆர்சிபி 12 புள்ளிகளுடனும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு நெருங்கிவிட்டனர். 4வது இடத்திற்காக பஞ்சாப் மற்றும் ஐதரபாத் அணிகள் 10 புள்ளிகளுடன் மோதி வருகின்றனர். இந்த அணிகளை தவிர்த்து டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளும் ரேஸில் உள்ளன.

Recommended Video

IPL 2022: Sanga's Cricket Wrap | Dhoniயை திட்டிய Virat Kohli? | Arjun Tendulkar's Debut?|
சுவாரஸ்யம் இருக்கிறது

சுவாரஸ்யம் இருக்கிறது

இப்படி கடும் போட்டி இருப்பதால், சிஎஸ்கே ரன் ரேட் அடிப்படையில் உள்ளே வருவது சாத்தியம் இல்லாத ஒன்றாகும். எனவே மீதமுள்ள 4 போட்டிகள் மூலமாக யார் ப்ளே ஆஃப் செல்ல வேண்டும், யார் செல்லக்கூடாது என்பதை சிஎஸ்கே நிர்ணயிக்கலாம். அடுத்ததாக டெல்லி, மும்பை, குஜராத், ராஜஸ்தான் அணிகளுடன் தான் மோதவுள்ளது.

Story first published: Thursday, May 5, 2022, 11:51 [IST]
Other articles published on May 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+