Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின் பர்த்டே போச்சு..ரோகித் பிறந்தநாளாவது சிறப்பா இருக்குமா? முதல் வெற்றிக்காக களமிறங்கும் மும்பை

மும்பை: ஐபிஎல் வரலாற்றின் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இன்று தங்களது 9வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானை எதிர்கொள்கிறது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சச்சின் பிறந்தநாளில் அன்று தான் மும்பை அணி தோல்வியை சந்தித்து, இதனால் ரோகித் சர்மாவின் பிறந்தநாளிலாவது மும்பை முதல் வெற்றியை பெறுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

அரைசதமில்லா 16 இன்னிங்ஸ்

அரைசதமில்லா 16 இன்னிங்ஸ்

மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமே பேட்டிங் சொதப்பல் தான். கேப்டன் ரோகித் சர்மா, பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் திணறுவது தான் பெரிய பிரச்சினையே.கடந்த 16 போட்டிகளாக ரோகித் சர்மா ஒரு முறை கூட அரைசதம் அடிக்கவில்லை. மும்பை அணியில் சேர்ந்து, இத்தனை இன்னிங்சாக அவர் சதம் அடிக்காமல் இருந்ததில்லை.

சொதப்பும் தொடக்கம்

சொதப்பும் தொடக்கம்

ரோகித் சர்மா நடப்பு சீசனில் 6 முறை பவர் பிளேவை தாண்டியது இல்லை. ரோகித் மட்டும் இன்று ரசிகர்களுக்கு தனது பேட் மூலம் பர்த்டே பரிசு தந்தால், மும்பை அணி தப்பிக்கும். இதே போன்று இஷான் கிஷனும் சொதப்புவது தான் மும்பைக்கு தலைவலியே. 15.25 கோடி ரூபாய் கொடுத்து எடுத்த அவர் நடப்பு சீசனில் 199 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.இதனால் இஷான் கிஷனை நடுவரிசையில் களமிறக்க வேண்டும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பொலார்ட் நீக்கம்?

பொலார்ட் நீக்கம்?

இதே போன்று மும்பை அணியின் பொலார்டும் தனது பழைய அதிரடியை காட்டுவதில்லை. 8 போட்டியில் விளையாடி 115 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இதனால் அவருக்கு பதிலாக டிம் டேவிட் அல்லது ஃபெபியன் ஆலனை சேர்க்க வேண்டும். மும்பை அணிக்கு நம்பிக்கை அளிப்பதே பிரவீஸ், சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா மட்டும் தான்.இந்த கூட்டணி நிலைத்து ஆடினாலே பெரிய இலக்கை எட்ட முடியும்.

பந்துவீச்சும் மோசம்

பந்துவீச்சும் மோசம்

மும்பை அணியின் இந்த சோக கதைக்கு முக்கிய காரணங்களில் மற்றொன்ரு பும்ராவும், மற்ற பந்துவீச்சாளர்கள் தான். பும்ரா நடப்பு சீசனில் வெறும் 5 விக்கெட்டை மட்டுமே வீழ்த்தியுள்ளார். டேனியல் சாம்ஸ், மெர்டித், உனாட்கட் என யாரும் பும்ராவுக்கு கைக்கொடுக்கவில்லை. இந்த நிலையில், ராஜஸ்தான் அணி 8 போட்டியில் விளையாடி 6 வெற்றியை பெற்றுள்ளார்.

ராஜஸ்தான் பலம்

ராஜஸ்தான் பலம்

கடந்த ஆட்டத்தில் பட்லர் சொதப்பியும் கூட ராஜஸ்தான் வென்றது. ஆனால் பட்லரோ, மும்பை அணி பந்துவீச்சாளர்கள் என்றாலே தனி கவனிப்பு தான்.மும்பைக்கு எதிராக அதிக சதம், அதிக ரன்கள் அடித்த வீரரான அவரை ஆரம்பத்திலேயே கட்டுக்குள் வைக்க வேண்டும். மேலும் ராஜஸ்தான் அணியின் காரணம், அவர்களது வேகப்பந்துவீச்சும், சுழற்பந்துவீச்சும் தான். சாஹல், பிரசித் கிருஷ்ணா போன்றோர் கடும் நெருக்கடிக்காக காத்துள்ளனர்.

நேருக்கு நேர்

நேருக்கு நேர்

தொடர்ந்து 4வது வெற்றிக்காக ராஜஸ்தான் அணி மும்பையை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 25 போட்டியில், மும்பை அணி 13 போட்டியிலும், ராஜஸ்தான் அணி 12 வெற்றியிலும் பெற்றுள்ளன. இதில் கடைசியாக நடைபெற்ற 9 போட்டியில் ராஜஸ்தான் 6 போட்டியில் வென்றார். கடைசியாக இவ்விரு அணிகளும் மோதிய இந்த மைதானத்தில் பட்லர் சதம் விளாசினார்.

Story first published: Saturday, April 30, 2022, 11:32 [IST]
Other articles published on Apr 30, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+