Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ப்ளே ஆஃப் விமர்சனங்கள்.. தோனி தந்த தரமான பதிலடி.. சிஎஸ்கே ரசிகர்களுக்கு புதிய நம்பிக்கை!!

சிஎஸ்கேவின் ப்ளே ஆஃப் வாய்ப்புகள் குறித்த விமர்சனங்களுக்கு தோனி தரமான பதிலடி கொடுத்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 49வது லீக் போட்டியில் நேற்று சென்னை அணியை 13 ரன்கள வித்தியாசத்தில் ஆர்சிபி வீழ்த்தியது.

முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியில் லஹிபால் லாம்ரோர் மற்றும் தினேஷ் கார்த்திக்கின் அதிரடியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 173 ரன்களை எடுத்தது.

சிஎஸ்கேவின் தோல்வி

சிஎஸ்கேவின் தோல்வி

இதன் பின்னர் களமிறங்கிய சென்னை அணிக்கும் தொடக்கம் சிறப்பாக தான் இருந்தது. ஓப்பனிங் வீரர்கள் ருதுராஜ் கெயிக்வாட் 28 ரன்கள், டெவோன் கான்வே 56 ரன்களை கொடுத்து நல்ல அடித்தளம் அமைத்தனர். ஆனால் இதன் பின்னர் வந்த உத்தப்பா (1), அம்பத்தி ராயுடு (10), ஜடேஜா (3), தோனி (2) அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் இறுதியில் சிஎஸ்கே 160/8 ரன்கள் எடுத்து, 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

ப்ளே ஆஃப் வாய்ப்புகள்

ப்ளே ஆஃப் வாய்ப்புகள்

இந்த தோல்வியின் மூலம் சிஎஸ்கேவின் ப்ளே ஆஃப் கனவு பறிபோனது. இதுவரை 10 போட்டிகளில் ஆடியுள்ள சிஎஸ்கே 3 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. இதனால் இனி வரும் அனைத்து போட்டிகளிலும் அபார வெற்றி பெற்றாலும் கூட ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்வது கடினம் தான். இதனால் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

 தோனியின் விளக்கம்

தோனியின் விளக்கம்

இந்நிலையில் இதற்கு கேப்டன் தோனி பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், 2வதாக பேட்டிங் செய்யும் அணி சூழல்களை பொறுத்து கணக்கிட்டு அதற்கேற்றார் போல செயல்பட வேண்டும். நமக்கு தோன்றும் ஷாட்களை ஆடக்கூடாது. அந்தவகையில் நேற்று மிடில் ஆர்டரில் சொதப்பிது தான் தோல்விக்கான காரணம்.

Recommended Video

IPL-ன் Successful Run Chases! No Loss-ல் Finish செய்த 6 Matches | OneIndia Tamil
கிண்டல்களுக்கு பதிலடி

கிண்டல்களுக்கு பதிலடி

புள்ளிப்பட்டியலில் எத்தனை புள்ளிகளை பெற்றுள்ளோம் என நினைப்பது தேவையில்லாத கவனச் சிதறல்களை தான் உண்டாக்கும். இங்கு தவறு நடந்துள்ளது, அதனை சரிசெய்வது ஒரு செயல்பாடு. கிரிக்கெட்டில் புள்ளிப்பட்டியிலில் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை விட, நமது செயல்பாடுகளை சரியாக செய்து வருகிறோமா என்பது தான் முக்கியம். அது நமக்கு பலனைக் கொடுக்கும்.

Story first published: Thursday, May 5, 2022, 10:50 [IST]
Other articles published on May 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+