“தல” தோனிக்கு பெரும் தலைவலி.. ஜடேஜாவுக்கு மாற்று வீரர் யார் தெரியுமா??.. சிஎஸ்கே ப்ளேயிங் 11 இதோ
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய தலைவலி உருவாகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 59வது லீக் போட்டியில் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன.
இந்த இரு அணிகளுமே ப்ளே ஆஃப் ரேஸில் இருந்து வெளியேறிவிட்ட போதும், இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு ஏகபோகத்திற்கு உள்ளது.

முக்கியமான போட்டி
இதற்கு காரணம் கடந்த முதல் லீக் போட்டியில் மும்பை அணிக்கு கடைசி நேரத்தில் தோனி கொடுத்த அதிர்ச்சி தான். 6 பந்துகளில் 17 ரன்கள் தேவை என்ற சூழல் இருந்த போது தோனி அடித்து வெற்றி பெற்றுக்கொடுத்தார். எனவே அதற்கு சரியான பதிலடி கொடுப்பதற்காக மும்பை அணி முழுபலத்துடன் களமிறங்கவுள்ளது.

ப்ளேயிங் 11 குழப்பம்
ஆனால் சிஎஸ்கே ப்ளேயிங் 11ல் தான் குழப்பம் நீடிக்கிறது. முன்னணி ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா தொடரில் இருந்து வெளியேறிவிட்டார். மும்பை களத்தில் சுழற்பந்துவீச்சு எடுபடும். எனவே இனி மொயீன் அலி, மஹீஷ் தீக்ஷணா தான் அதனை பார்த்துக்கொள்ள வேண்டும். ஜடேஜா களமிறங்கும் இடத்தில் ஷிவம் தூபே களமிறக்கப்படலாம்.

2 முக்கிய மாற்றங்கள்
மேலும் அணியின் சீனியர் வீரரான ராபின் உத்தப்பா கடந்த சில போட்டிகளாக மோசமாக சொதப்பி வருகிறார். எனவே அவரின் இடத்திற்கும் ஜகதீசன் களமிறக்கப்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இதே போல டுவைன் பிராவோவும் அணிக்குள் கொண்டு வரப்படலாம்.

சென்னை ப்ளேயிங் 11
ருதுராஜ் கெயிக்வாட், டெவோன் கான்வே, ராபின் உத்தப்பா/ ஜகதீசன், அம்பத்தி ராயுடு, மொயீன் அலி, தோனி, ஷிவம் தூபே, டுவைன் பிராவோ, மஹீஷ் தீக்ஷணா, சிமர்ஜீத் சிங், முகேஷ் சௌத்ரி
Recommended Video

புள்ளிவிவரங்கள்
ஐபிஎல் தொடரில் இதுவரை சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் இதுவரை 33 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சென்னை அணி 14 முறையும், மும்பை அணி 19 முறையும் வெற்றி பெற்றுள்ளது. எனினும் நடப்பு சீசனில் சிஎஸ்கே தான் சற்று பலமாக உள்ளது.


Click it and Unblock the Notifications