Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குசும்பு புடிச்சவர்பா தோனி.. களத்தில் பிராவோவை கலாய்த்த விதம்.. சிரித்து தள்ளிய வர்ணனையாளர்கள்!

மும்பை: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனி செய்த குசும்பு இணையத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

Dhoniயின் Epic Reply: 'Playoff போகலனா உலகம் அழிஞ்சிராது' | CSK vs DC | OneIndia Tamil

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 54வது லீக் போட்டியில் சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகள் மோதின.

இந்த போட்டியில் 91 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி சிஎஸ்கே வெற்றி பெற்றது. மேலும் புள்ளிப்பட்டியலிலும் 8வது இடத்திற்கு முன்னேறியது.

சிஎஸ்கே எப்படி வென்றது

சிஎஸ்கே எப்படி வென்றது

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில் டெவோன் கான்வே 87 ரன்கள், ருதுராஜ் கெயிக்வாட் 41 ரன்கள் விளாச பின்னர் வந்த ஷிவம் தூபே 32 ரன்கள் அடித்தார். இதனால் 20 ஓவர்களில் அந்த அணி 208-6 ரன்களை குவித்தது. இதன் பின்னர் ஆடிய டெல்லி அணியில் ஒரு வீரர் கூட நிலைத்து நிற்கவில்லை. இதனால் 17.4 ஓவர்களில் 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

பிராவோவின் டைவ்

பிராவோவின் டைவ்

இந்நிலையில் இந்த போட்டியில் அனைவரும் சீரியஸாக இருந்த போது தோனி செய்த குசும்பு கவனத்தை பெற்றுள்ளது. ஆட்டத்தின் 17வது ஓவரில் மஹீஷ் தீக்‌ஷணா வீசிய பந்தை ஆண்ட்ரிக் நார்ட்ஜே கவர் திசையில் ஓங்கி அடித்தார். ஆனால் அங்கு நின்றிருந்த டுவைன் பிராவோ டைவ் அடித்து சிறப்பான முறையில் பந்தை தடுத்து நிறுத்தினார்.

 தோனி செய்த விஷயம்

தோனி செய்த விஷயம்

அதனை பாராட்ட வந்த தோனி, அனைவரின் முன்பும் 'well done old man' ( சிறப்பாக செய்தீர்கள் வயதானவரே" என குசும்பாக கூறினார். இதனால் களத்தில் இருந்த சக வீரர்கள் சிரித்தனர். மேலும் ஸ்டம்ப் மைக்கில் அது பதிவானதால் கமெண்ட்டேட்டர்ஸும் சிரிப்பலையில் ஆழ்ந்தனர். இதுகுறித்த வீடியோவும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

குறையாத வேகம்

வயதானாலும் தோனி மற்றும் பிராவோவின் வேகம் குறையவில்லை. நேற்றைய போட்டியில் 8 பந்துகளை சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரி என 21 ரன்களை கடைசி நேரத்தில் சேர்த்தார். இதே போல டுவைன் பிராவோ 2.4 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

Story first published: Monday, May 9, 2022, 17:32 [IST]
Other articles published on May 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+