Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியின் முடிவு தவறாகிவிட்டதே.. ஷாக் கொடுத்த ஹர்திக் பாண்ட்யா.. சிஎஸ்கே தோற்றது எப்படி - தோனி பதில்!

மும்பை: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் தோனியின் முடிவு தவறானதால் சிஎஸ்கே பரிதாபமாக தோல்வியடைந்தது.

Recommended Video

Chennai Super Kings படுதோல்வி ! Hardik Pandya வேறலெவல் | Oneindia Tamil

ஐபிஎல் தொடரில் 61வது லீக் போட்டியாக இரு அணிகளும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக இருந்தது.

சிஎஸ்கே பேட்டிங் சொதப்பல்

சிஎஸ்கே பேட்டிங் சொதப்பல்

தொடக்க வீரர் டெவோன் கான்வே 5 ரன்களுக்கு அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். அதன்பின்னர் வந்த மொயீன் அலி (21), ஷிவம் தூபே (0), தோனி (7) என ரன்கள் அடிக்கவே திணறினர். ருதுராஜ் கெயிக்வாட் 49 பந்துகளில் 53 ரன்களும், ஜகதீசன் 33 பந்துகளில் 39 ரன்களும் குவித்தனர். இதனால் 20 ஓவர்களில் சென்னை அணி 133- 5 ரன்களை மட்டுமே சேர்த்தது.

குஜராத் வெற்றி

குஜராத் வெற்றி

இதன் பின்னர் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி ஓப்பனிங் வீரர் விருதிமான் சாஹா பொளந்துக்கட்டினார். 57 பந்துகளில் அவர் 8 பவுண்டரிகளுடன் 67 ரன்களை விளாசினார். மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் வந்த மேத்யூவ் வேட் 20 ரன்களும், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 7 ரன்களும் அடிக்க 19.1 ஓவர்களில் குஜராத் அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 137 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

தோனி செய்த தவறு

தோனி செய்த தவறு

வான்கடே மைதானத்தில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. இதனால் ரன்கள் அடிக்கவே வீரர்கள் திணறினர். இதுபோன்ற சமயங்களில் 2வதாக பேட்டிங் ஆடுவது தான் சரியான முடிவு. ஆனால் டாஸ் வென்ற தோனி பேட்டிங்கை தேர்வு செய்து, தோல்விக்கு அடித்தளத்தை அமைத்துவிட்டார். இதுகுறித்து அவரே கூறினார்.

தோனி தந்த விளக்கம்

தோனி தந்த விளக்கம்

அதில், முதலில் பேட்டிங் செய்தது தவறான முடிவு தான். முதல் பகுதியில் வேகப்பந்துவீச்சாளர்களை சமாளிப்பது மிகவும் கடினமானதாக இருந்தது. ஷிவம் தூபேவை அணிக்குள் கொண்டு வந்தது நன்றாக போனது. இதே போல புதிதாக வந்த பதிராணாவால் தான் மோசமான தோல்வியாக செல்லாமல் சிஎஸ்கே தப்பியது எனக்கூறினார்.

Story first published: Sunday, May 15, 2022, 19:41 [IST]
Other articles published on May 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+