
தோனிக்கு ஸ்பெஷல் தினம்
ஒரு கேப்டனாக சாதித்து காட்டிய தோனி, ஒரு பேட்ஸ்மேனாகவும் இன்று புதிய சாதனைகளை படைக்க காத்துள்ளார். அதாவது இன்று சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல்-ல் தோனி தனது 200வது போட்டியில் விளையாடவிருக்கிறார். இந்த மைல்கல்லை எட்டும் 2வது வீரர் இவராகும். இதற்கு முன்னதாக ஆர்சிபி வீரர் விராட் கோலி கடந்தாண்டு இந்த சாதனையை படைத்தார். தற்போது வரை கோலி ஆர்சிபிக்காக 217 போட்டிகளில் ஆடியுள்ளார்.

தோனி பிரமாண்ட சாதனை
ஆர்சிபியுடனான போட்டி தோனிக்கு டி20 கிரிக்கெடில் ஒரு கேப்டனாக செயல்படபோகும் 302வது போட்டியாகும். இதுவரை 5994 ரன்களை குவித்துள்ளார். இன்றைய போட்டியில் தோனி 6 ரன்களை அடித்தால் ஒரு கேப்டனாக டி20 கிரிக்கெட்டில் 6000 ரன்களை அடித்த 2வது வீரராக தோனி பெருமை பெறுவார். முதல்நபராக விராட் கோலி 190 போட்டிகளில் 6451 ரன்களை அடித்திருந்தார்.

முதல் இந்தியர் தோனி
ஐபிஎல்-ல் ஆர்சிபி அணி தான் தோனிக்கு மிகவும் பிடித்தமான அணியாக உள்ளது. ஏனென்றால் அந்த அணிக்கு எதிராக இதுவரை 836 ரன்களை குவித்துள்ளார். இதில் 46 சிக்ஸர்களும் அடங்கும். இன்று 4 சிக்ஸர்களை மட்டும் அடித்துவிட்டால், ஐபிஎல்-ல் ஒரு அணிக்கு எதிராக 50 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெறுவார்.

சிஎஸ்கே ப்ளே ஆஃப் வாய்ப்பு
தோனி கேப்டனாக பொறுப்பேற்றதால் ப்ளே ஆஃப் நம்பிக்கையும் பிறந்துள்ளது. இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே 3 வெற்றிகளை பெற்றுள்ளது. மீதமுள்ள 5 போட்டிகளிலும் அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே சிஎஸ்கே ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். இதற்காக அணியின் ப்ளேயிங் 11ல் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார்.


Click it and Unblock the Notifications