ஒரே ஒரு வெற்றி தான்.. ஐபிஎல்-ல் பிரமாண்ட சாதனை படைத்த சிஎஸ்கே.. கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்!!
மும்பை: ஒரே ஒரு போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய சாதனை படைத்துள்ளது.
4 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்தாண்டு தொடக்கமே சரியில்லை.
தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்திருந்த சென்னை அணி நேற்று முதல் வெற்றியை பதிவு செய்தது.

சிஎஸ்கேவின் வெற்றி
ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 216 ரன்களை சேர்த்தது. இதன் பின்னர் விளையாடிய ஆர்சிபி அணியை 193 ரன்களுக்கெல்லாம் சுருட்டி 23 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிஎஸ்கேவின் முதல் வெற்றியே பிரமாண்டமாக உள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பிரமாண்ட ரெக்கார்ட்
இந்நிலையில் இந்த ஒரே ஒரு வெற்றி பிரமாண்ட சாதனையையும் படைக்க வைத்துள்ளது. அதாவது ஐபிஎல் வரலாற்றில் அதிக வெற்றி சதவீதம் கொண்ட அணியாக சிஎஸ்கே உருவெடுத்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு முதல் தற்போது வரை சிஎஸ்கே அணி 59.84 என்ற உச்சபட்ச வெற்றி சதவீதத்தை தனதாக்கியுள்ளது.

புள்ளிவிவரம் என்ன
இதுவரை 200 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே 118 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 80 முறை தோல்விகளை சந்தித்தது. சென்னைக்கு அடுத்தபடியாக மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. இதுவரை 221 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 125 வெற்றிகள், 92 தோல்விகளை பெற்றுள்ளது. மும்பை அணியின் வெற்றி சதவீதம் 57.46 என வைத்துள்ளது.
Recommended Video

கூடுதல் சாதனை
இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இனி தொடர் வெற்றிகளை பெற்றால், இந்த சதவீதம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதுமட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான கேப்டன் என்ற சாதனையையும் தோனி தான் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications